2 ஜி ஒதுக்கீட்டுக்கான அடிப்படை ஏலத் தொகையில் 30 சதவீதத்தைக் குறைக்க
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான திட்டங்களுக்கு விரைவில் அனுமதி
வழங்குவதற்காக பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவை அமைப்பது என்றும்
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்காக,
நிலங்களை கையகப்படுத்துவதற்கு வகை செய்யும் மசோதாவுக்கும், புதிய யூரியா
முதலீட்டுக் கொள்கைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
அளிக்கப்பட்டது.
அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் பெற்ற அமைப்புகளை நீதிபதிகள்
வெளி்ப்படையாக விமர்சிப்பதைத் தடைசெய்யும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது.
-பசுமை நாயகன்