ஜப்பானில் கிழக்கு கடற்கரையின் ஹொன்சு தீவில் கடுமையான நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி மாலை 5.18 மணிக்கு இந்த நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோளில் 7.3ஆக நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1 மீட்டர்
அளவுக்கு அலைகள் எழும்பக்கூடும் என கடலோர மக்களுக்கு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து
ஏற்பட்ட சுனாமியால் ஜப்பானில் பெரும் அளவு உயிர்சேதமும், பொருள் சேதமும்
ஏற்பட்டது. ஃபுகுஷிமா அணுஉலையில் இருந்து அணுக்கதிர்வீச்சு ஏற்படும்
அளவிற்கு பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
-பசுமை நாயகன்