கடல் வழியாக கூடங்குளம் அணுமின்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம்
நடைபெற்று வருகிறது. இதனையொட்டிபாதுகாப்பு ஏற்பாடுகள்
பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஆயுதப்படையினர், காவல்துறையினர் என
2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர, அணுமின் நிலையத்தை சுற்றி, மத்திய தொழில் பாதுகாப்புப்
படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இடிந்தகரை உள்ளிட்ட
மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கடல் வழியாக படகில் சென்று அணுமின்
நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூடங்குளத்தில் கடல் வழியாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்
அதேநேரத்தில், அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவான அரசியல் கட்சிகள்
சார்பில், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில்
சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல் : கூடங்குள அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு
ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அளித்த பேட்டியில் - சர்வதேச மனித உரிமை மீறல்
தினமான இன்று அனுசரிக்கப்படும் இந்த போராட்டத்தில், கூடங்குளத்தில்
திட்டமிட்டு மனித உரிமை மீறப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
-பசுமை நாயகன்