கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம் ஜனவரி மாதத்திற்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அணுமின் உற்பத்தி கழகம் தெரிவித்திருப்பதாக
பி.டி.ஐ.,நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலை தொடர்பான கேள்வி ஒன்றிற்கு நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பதிலளித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி டிசம்பர் மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என எழுத்து பூர்வமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், மின் உற்பத்தி ஜனவரி 15ம் தேதி தொடங்கும் என அணு மின் உற்பத்திக்கழகம் தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. கூடங்குளம் அணு உலையின் முதல் யூனிட்டில் ஆயிரம் மெகவாட் மின்சார உற்பத்திக்கான பணிகள் 99புள்ளி 65 சதவீதம் முடிந்து விட்டதாகவும், அணுமின் உற்பத்தி கழகம் தெரிவித்துள்ளது. 2 ஆவது யூனிட்டில் ஆகஸ்ட் மாதம் மின் உற்பத்தி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்உற்பத்தியை விரைவில் துவங்குவதற்கான பணிகளை நடத்தி வருவதாக அணு மின் உற்பத்தி கழகம் தெரிவித்துள்ளது.

-பசுமை நாயகன்