அரசு பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு
வழங்கும் மசோதா மீதான் குரல் வாக்கெடுப்பு மாநிலங்களவையில் நடைபெற்றது. இது
அரசியல் சாசன திருத்த சட்டம் என்பதால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.
இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ், இடது சாரிகள், திமுக,
அதிமுக உள்ளீட்ட 184 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 8 உறுப்பினர்கள்
எதிராகவும் வாக்களித்தனர்.
மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்ததால் சட்ட திருத்த மசோதா நிறைவேறியதாக அவை தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார்.
-பசுமை நாயகன்