சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது
தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறுகிறது. வாக்கெடுப்பிற்கு
வகைசெய்யும் விதி எண் 184ன் கீழ் மக்களவையில் இன்று பிற்பகல் 2 மணியளவில்
விவாதம் தொடங்குகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ், அந்நிய நேரடி முதலீட்டை
எதிர்த்துப் பேசி விவாதத்தை தொடங்கி வைக்கிறார். இன்று தொடங்கும் விவாதம்
நாளை வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து சில்லரை வர்த்தகத்தில் அந்நிய
நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்களது எம்.பி.க்களை விவாதத்தின்போது
அவைக்கு வருமாறு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன. குறிப்பாக தெலங்கானாவைச்
சேர்ந்த சில காங்கிரஸ் எம்.பி.க்கள் வாக்கெடுப்பை புறக்கணிக்க முடிவு
செய்திருப்பதால் அவர்களுடன் கட்சி மேலிடம் பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டுள்ளது. இதேபோன்று விவாதத்தின்போது செயல்படும் முறை குறித்து
முடிவெடுக்க இன்று காலை பாரதிய ஜனதா எம்.பிக்கள் குழு கூட்டம்
நடைபெறுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி விவகாரத்தில்,
மத்திய அரசு வாக்கெடுப்பை சந்திக்க தயாராக இருக்கும் நிலையில் மக்களவையில்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு உள்ள பலத்தை பற்றிய தகவல்கள் :
545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 273 ஆகும். தற்போது மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 206 உறுப்பினர்கள் இருக்கின்றனர். மத்திய அரசுக்கு திமுகவின் 18 எம்.பி.க்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 9 எம்.பிகளும் ஆதரவளித்து வருகின்றனர். இதுதவிர ராஷ்டிரிய லோக் தள், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவும் காங்கிரஸ் அரசுக்கு உள்ளது. அதேநேரத்தில் மத்திய அரசை 22 உறுப்பினர்கள் கொண்ட சமாஜ்வாதி கட்சி, 21 உறுப்பினர்களை கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி, 4 உறுப்பினர்களை கொண்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரித்து வருகின்றன.இக்கட்சிகளின் உதவி இருந்தால் வாக்கெடுப்பில் வெற்றிபெற தேவையான 273 உறுப்பினர்கள் ஆதரவை மத்திய அரசு எளிதாகப் பெற்றுவிடும்.சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் ஒரு வேளை சமாஜ் வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆதரவு தர மறுத்தால் காங்கிரஸ் அரசுக்கான கூட்டணியின் பலம வெகுவாக குறைந்தவிடும். இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சிக்கல் ஏற்படும்.

-பசுமை நாயகன்