பூமிக்கு மிக அருகில் வியாழன் கிரகம் வரும் அரிய நிகழ்வு இன்று
நடைபெறவுள்ளது. இதனைக் காண்பதற்காக சென்னை பி்ர்லா கோளரங்கத்தில் சிறப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூமி மற்றும் சூரியனுக்கு 180 டிகிரி நேர்கோட்டில் வரும் வியாழன் கோளை
இன்று மாலை கிழக்கு வானத்தில் வெறும் கண்களால் பார்க்கலாம். சுமார் 62 கோடி
கிலோ மீட்டர் அருகில் நெருங்கிவரும் இந்த நிகழ்வின் போது வியாழன் கோளோடு
அதன் துணைக்களில் நான்கையும் தெளிவாக பார்க்க முடியும்.
398 புள்ளி 9 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் இந்த அரிய நிகழ்வு இனி 2014 ஆம் ஆண்டு, ஜனவரி 5 ஆம் தேதிதான் மீண்டும் ஏற்படும்.
-பசுமை நாயகன்