பெட்ரோல் பங்குகளில் அளவு குறைவாக விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு
வருகின்றன. இந்நிலையில் சில பங்குகளில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலின்
அளவு குறைவாக இருப்பதாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் தொடர்ந்து புகார்
தெரிவித்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் தலைமையிலான வருவாய்த்துறை
மற்றும் காவல்துறையினர் பெட்ரோல்பங்குகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அப்பகுதியிலுள்ள 3 பெட்ரோல் பங்குகளில் குறைவான அளவில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அந்த 3 பங்குகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. தலைமை
தபால் நிலையம் எதிரே செயல்பட்டுவரும் பெட்ரோல் பங்கின் ஒரு பிரிவுக்கு
அதிகாரிகள் தடைவிதித்தனர்.
-பசுமை நாயகன்