சென்னை வாசிகளுக்கு கோடை காலத்தில் எப்போதும் இரண்டு சவால்
ஒன்று வாட்டும் வெயில் மற்றொன்று தண்ணீர் தட்டுப்பாடு. ஆனால் இந்த ஆண்டு
தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் குறையும் நீர்மட்டம் : 140 அடி
நீர்மட்டம் கொண்ட பூண்டி எரியில் மொத்தம் 3 ஆயிரத்து 231 கன அடி நீரை
சேமிக்க முடியும். இந்த ஏரியில் தற்போது 133 புள்ளி 7 எட்டு அடி அளவே
நீர்மட்டம் உள்ளது. அதாவது ஆயிரத்து 473 கனஅடி நீர் மட்டுமே தற்போது
இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் புழல் ஏரியில் 2 ஆயிரத்து
666 கன அடி தணணீர் இருப்பு இருந்தது. அறுபத்து நான்கரை அடி கொள்ளளவு கொண்ட
சோழவரம் ஏரியில் 881 கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் தற்போது 57
புள்ளி எட்டு 7 அடி அளவுக்கு, அதாவது, 461 கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 871 கனஅடி நீர் இருந்தது.
பாதியாக குறைந்த நீர்மட்டம் : இதேபோன்று, செங்குன்றம்
ஏரியின் மொத்த நீர்மட்டம் 50 புள்ளி 20 அடி. இதில் 3 ஆயிரத்து 300 கன அடி
நீரை சேமித்து வைக்க முடியும். அந்த ஏரியில் தற்போது 44 புள்ளி 24 அடி
அளவுக்கே நீர்மட்டம் உள்ளது. அதாவது, தற்போது 2 ஆயிரத்து 87 கனஅடி நீர்
உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் செங்குன்றம் ஏரியில் 2 ஆயிரத்து 692
கன அடி நீர் இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரி 85 புள்ளி 4 பூஜ்யம்
நீர்மட்டம் கொண்டது. இது 3 ஆயிரத்து 645 கன அடி நீர் கொள்ளளவு கொண்டது.
இந்த ஏரியில் தற்போது 74 புள்ளி 9 இரண்டு அடி அளவுக்கே தண்ணீர் இருப்பு
உள்ளது. அதாவது, தற்போது ஆயிரத்து 270 கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த
ஏரியில் கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்தில் 2 ஆயிரத்து 548 கன நீர் இருந்தது.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? சென்னையில் உள்ள
அனைத்து ஏரிகளிலும் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த தண்ணீரின் அளவை விட,
இந்த ஆண்டு பாதிக்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது. இதனால், வரும்
கோடைக்காலம் சென்னை நகர மக்களுக்கு மிகுந்த சோதனைக் காலமாக இருக்கும் என
கூறப்படுகிறது.
-பசுமை நாயகன்