டெல்லியில் கல்லூரி மாணவி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தடுத்து பாலியல்
புகார்கள் வெளியாகி வருவது நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்து
பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதேபோன்று, ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் 24 வயது பெண்மணி ஒருவர் 3
இளைஞர்கள் கொண்ட கும்பலால் செவ்வாய் அன்று வன்கொடுமைக்கு
ஆளாக்கப்பட்டுள்ளார். அந்த பெண்மணி அணிந்திருந்த தங்க நகைகளை
பறித்துக்கொண்ட கும்பல் பின்னர் அப்பெண்மணியை அருகே உள்ள காட்டிற்குள்
தூக்கிச் சென்று வன்கொடுமைக்கு ஆளாக்கினர். அம்மூவரும் கியோன்ஜார்
மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி: டெல்லியில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பள்ளியில் 3 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
மேற்கு டெல்லியின் சாரக்பூர் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. அங்குள்ள சிறுவர்களுக்கான விளையாட்டுப் பள்ளியில் பயின்றுவந்த 3 வயது சிறுமியை அப்பள்ளி உரிமையாளரின் கணவரே வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கடந்த
2011ம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 24 ஆயிரத்து 206 பெண்கள் பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை
2010ம் ஆண்டை விட 10 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் அதில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்குவங்கம்: மேற்குவங்கத்தின் மால்டா மாவட்டத்தில்
உள்ள சாத்மோனி கிராமத்தில் வசிந்து வந்த 35 வயது விதவைப் பெண்ணை, 4 பேர்
கொண்ட கும்பல் வெள்ளிக்கிழமை இரவு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளது.
பின்னர் அந்த கும்பல் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த அவர், தற்போது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம்
தொடர்பாக சாத்மோனி கிராம அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றும் அபு பக்கர்
என்பவர் உட்பட 4 பேரை காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தேடி
வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அம்பேத்கர்
நகரை அடுத்த அக்பர்பூரில், 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் அண்டை வீட்டைச்
சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சமயத்தில்
அந்த சிறுமி, வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து சுயநினைவில்லாமல்
இருந்த சிறுமியை அவரது தாயார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்த்துள்ளார்.
இது மட்டுமின்றி, சஹாஜன்வா என்ற நகரைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர்
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக கோரக்பூரில் புகார் கொடுத்துள்ளார்.
கடந்த 15ம் தேதி தனக்கு ஏற்பட்ட இந்த கொடூரத்தை இதுவரை புகாராக
கொடுக்காமல் இருந்த அந்த பெண் வெள்ளிக்கிழமையன்று உள்ளுர் காவல்நிலையத்தில்
புகார் அளித்ததை தொடர்ந்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை
ஒருவரும் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக புகார்
அளித்திருக்கிறார். சந்தல் என்ற இடத்தில் கலைநிகழ்ச்சி நடத்தச் சென்ற
இடத்தில், நாகாலந்து தேசிய சமூக கவுன்சில் அமைப்பை சேர்ந்த லிவிங்ஸ்டோன்
என்பவர், பாதுகாவலர்கள் முன்னிலையிலேயே தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக
மோகோமோ என்ற நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடிகைக்கு நிகழ்ந்த கொடுமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து
இம்பாலில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கு உரிய பாதுகாப்பு
வழங்க வேண்டியது சமூகத்தினரின் கடமை என மற்றொரு மணிப்பூர் நடிகை
வலியுறுத்தியுள்ளார்.
ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் 19 வயதுடைய இளம்பெண்ணும், 24
வயது பெண்மணி ஒருவரும் இரு வெவ்வேறு கும்பல்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்
பட்டுள்ளதாக புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஒடிசாவின் புவனேஸ்வர் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் 50 வயது முதியவர்
உள்பட 5 நடனக் கலைஞர்கள் கும்பலால் புதன்கிழமை வன்கொடுமைக்கு ஆளாக்கப்
பட்டார்.
மஹிலா காவல்நிலையத்தில் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜடாதரி
சாஹூ என்ற 50 வயது முதியவர் உள்பட 4 பேரை கைது செய்துள்ளதாகவும்,
தலைமறைவாகவுள்ள ஒருவர் தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர்
தெரிவித்தனர்.

மேற்கு டெல்லியின் சாரக்பூர் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. அங்குள்ள சிறுவர்களுக்கான விளையாட்டுப் பள்ளியில் பயின்றுவந்த 3 வயது சிறுமியை அப்பள்ளி உரிமையாளரின் கணவரே வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுமிக்கு உடல்நலம் குன்றியிருந்ததால்,
பெற்றோர் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த
மருத்துவர்கள் அவள் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளார் என்று
தெரிவித்தனர்.
இதையடுத்து அவளது பெற்றோர் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு
செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப் பட்டார். மகளிர் மற்றும் குழந்தைகள்
மேம்பாடு அமைச்சகம் கேட்டுக்கொண்டதன் பேரில் டெல்லி குழந்தைகளின் உரிமை
பாதுகாப்பு ஆணையம் அந்த பள்ளியை உடனடியாக மூட காவல்துறைக்கு
பரிந்துரைத்துள்ளது.
-பசுமை நாயகன்