இந்தோனேஷியாவின் சவும்லாகி நகரை மையமாக கொண்டு, பூமியின் அடியில் 155
கி.மீட்டர் ஆழத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்
7.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தையொட்டி சுனாமி எச்சரிக்கை
விடுக்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தோனேசியா, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு அடிக்கடி நிகழும் நெருப்பு வளையத்திற்குள் அமைந்திருக்கும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு அடிக்கடி நிகழும் நெருப்பு வளையத்திற்குள் அமைந்திருக்கும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
-பசுமை நாயகன்