சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து பல்வேறு இடங்களில் ரயில் மறியலில் ஈடுப்பட்ட வணிகர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பின் மாநில செயலாளர்
கோவிந்தராஜுலு தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நேற்று வணிக சங்க
பேரமைப்பின் சார்பில் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டது. முன்னதாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு திரண்ட
வணிகர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் ஜங்ஷனில் நுழைந்து வைகை ரயிலை மறிக்க முயன்ற போது போலீசார்
அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து ரயில் மறியல் முயற்சியில்
ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்ட வணிகர்களை போலீசார் கைது செய்தனர்.
-பசுமை நாயகன்