அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்குவதில் எஸ்.சி., எஸ்.டி.,
பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வர வலியுறுத்தி பகுஜன் சமான் கட்சி
தலைவர் மாயாவதி மாநிலங்களவையில் பேசினார்.
அவரது கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சியினர்
முழக்கமிட்டனர். எதிர்கட்சியினரின் தொடர் அமளியால், அவையை 12 மணி வரைக்கும்
ஒத்திவைத்து உத்தரவிட்டார் அவை தலைவர் ஹமீது அன்சாரி.
நேற்றும் மாநிலங்களவை இதே காரணத்திற்காக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-பசுமை நாயகன்