நாகரிகமும் விஞ்ஞானமும் வளர வளர மனிதன் தன்னுடைய பழைய பெருமைகளை
மறந்துவிட்டு வருகிறான். இந்நிலையில் நமது பழமைகளை புதுப்பிக்கும் விதமாக
சென்னை மாநகராட்சி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
முடக்கத்தான் தோசை,ஆவாரம் பூ சாம்பார்,கறிவேப்பிலை இட்லி,பிரண்டை துவையல்,உளுந்து களி இவையெல்லாம் கிடைப்பது ஏதோ சித்த மருத்துவமனையிலோ அல்லது சித்த மருந்து கடையிலோ அல்ல. சென்னை மாநகராட்சி அலுவலகம் செயல்படும் ரிப்பன் மாளிகை கட்டட வளாகத்தில் தான், சாதாரண உணவகங்கள் மத்தியில் புதிய முயற்சியாக மூலிகை உணவகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. உணவே மருந்து, மருந்தே உணவு என்ற சித்த மருத்துவ வாக்கியத்தின் அடிப்படையில் துவங்கப்பட்டிருக்கும் இந்த மூலிகை உணவகத்தை பெரிதும் வரவேற்கிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள்.
மூலிகை அடிப்படையிலான உணவுகள் மட்டுமின்றி கருவேலங்குச்சி, வேப்பம்பூ, தூதுவலை, ஆவாரம்பூ போன்ற மூலிகைகளும் இங்கு விற்கப்படுகிறது.
லாப நோக்கில் இல்லாமல் மிகக்குறைந்த விலையில் இங்கு 50க்கும் மேற்பட்ட விதவிதமான மூலிகை உணவுகள் சுடச்சுட பரிமாறப்படுகிறது. அழிந்து வரும் சித்த மருத்துவ துறையை மேம்படுத்தவும் புதிது புதிதாக உருவெடுக்கும் நோய்களை எதிர்கொள்ளவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறுகிறார் இந்த சித்த மருத்துவர். சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த உணவகம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அதனை உடனடியாக மூட உத்தரவிடதோடு இந்த புதிய மூலிகை உணவகத்துக்கான யோசனைகளையும் உதவிகளையும் செய்திருக்கிறார் சென்னை மாநகர மேயர்.

-பசுமை நாயகன்