நவம்பர் மாதத்திற்கான நுகர்வோர் நிலை அதாவது சில்லறை விலை பணவீ்க்கம்
அதிகரித்துள்ளதாக மத்திய அரசு இன்று வெளியிட்ட புள்ளிவிவரம் கூறுகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 9.9 சதவீதமாக இருந்தது.
முந்தைய அக்டோபர் மாத நிலவரப்படி சில்லறை விலை பணவீக்கம் 9.75 சதவீதமாக
இருந்தது குறிப்பிடத்தக்கது. சில்லறை விலை பணவீக்கம் தொடர்ச்சியாக 3வது
மாதமாக உயர்வதும் கவனிக்கத்தக்கது.
கடந்த நவம்பர் நிலவரப்படி மற்ற பொருட்களை விட எண்ணெய் மற்றும்
கொழுப்புச்சத்து சார்ந்த உணவுப்பொருட்களின் விலைதான் மிகவும்
உயர்ந்திருந்தது. இவ்வகை பொருட்களின் விலை 17.67 சதவீதம்
அதிகரித்திருந்தது. அடுத்தபடியாக சர்க்கரையின் விலை 16.97 சதவீதமும்
காய்கறிகளின் விலை 14.74 சதவீதமும் அதிகரித்திருந்தன. பருப்பு வகைகளின்
விலை 14.19 சதவீதம் உயர்ந்திருந்தது. தானியங்களின் விலை 12.35 சதவீதம்
அதிகரித்திருந்தது.
-பசுமை நாயகன்