வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை
உள்ளிட்ட வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் பரவலாக
நேற்று மாலை முதலே கன மழை கொட்டியது.
இதனால் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவோர் கடும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதாலும் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகினர். ஆழ்வார்பேட்டையில் சாலையோர மரம் ஒன்று காரில் விழுந்தது. இதில் காரில் இருந்த 3 பேர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து விரைந்துவந்த அதிகாரிகள், மரத்தை வெட்டி அகற்றினர்.

கனமழை காரணமாக மின்சார ரயில் போக்குவரத்தும் சிறிதுநேரம்
பாதிக்கப்பட்டது. சென்னையில் மாலையில் தொடங்கிய மழை, விடிய விடிய பெய்தது.
இதேபோன்று சென்னையின் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர்
மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை
காரணமாக காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலூர் மாவட்டத்தில்
பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து
குறைந்த காற்றழுத்த நிலையாக மாறியுள்ளது. இதனால் தமிழகத்தின் வட கடலோர
மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை
ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-பசுமை நாயகன்