நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென காங்கிரஸ் சிந்தனை அமர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஜெய்ப்பூரில் இரண்டாவது நாளாக நடைபெறும் அம்மாநாட்டில், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற ஜோதிராதித்யா சிந்தியா, ராஜிவ் சுக்லா, ஜிதின் பிரசாதா போன்ற இளைய தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள், ராகுல் காந்திக்கு கட்சியில் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மணிசங்கர் அய்யர், வீரப்பமொய்லி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் இந்தக் கருத்தைக் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தேர்தலில் மட்டுமின்றி, ஒட்டுமொத்தக் கட்சியின் எதிர்காலத்தையும் ராகுல்காந்தியே வழிநடத்த வேண்டும் எனவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
-பசுமை நாயகன்