விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை, வரும் 28ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
தமிழக அரசின் தடை உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி நடிகர் கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து வரும் 28ம் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.
அதற்கு முன்பாக வரும் 26ம் தேதி, நீதிபதிகளும், மனுதாரர்களும் படத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதுவரை படத்தை வெளியிடுவதற்கான தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் சந்தித்த சிக்கல்கள்
தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வரும் கமல் ஹாசன், திரைத்துறையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முனைப்பை எப்போதுமே காட்டி வருபவர். அந்த வகையில் விஸ்வரூபம் படத்தையும் தனது பரிட்சார்த்த முறைக்கு உள்ளாக்கியதால், சில எதிர்ப்புகளை அவர் எதிர்கொண்டு வருகிறார். விஸ்வரூபம் படத்தை வெள்ளித்திரையில் வெளியிடுவதற்கு முந்தைய தினம், டி.டி.ஹெச் தொழில்நுட்பத்தில் விஸ்வரூபம் வெளியாகும் என கடந்த 4ம் தேதி அறிவித்தார். அப்போது முதலே பிரச்னைகளும் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கி விட்டன.
டி.டி.எச். வெளியீடு பிரச்னைக்கு தீர்வு
கமல் ஹாசனின் இந்த புதுமையான முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், தனது முடிவை சற்றே கமல் மாற்றிக் கொண்டார் . 9ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தனது திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்.
அமைதிக்கு பங்கம் வருமா?
திரையரங்கு உரிமையாளர்கள் விஸ்வரூபம் படத்தை திரையிட ஆதரவளிப்போம் எனத் தெரிவித்தாலும், மற்றொரு ரூபத்தில் பிரச்னை முளைத்தது. விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்திருப்பதாக, பிரத்யேக காட்சியை பார்வையிட்டவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கமலின் படத்தை வெளியிட, தமிழக அரசு 15 நாட்கள் தடை விதித்தது.
விஸ்வரூபத்திற்கு ஆதரவும்... எதிர்ப்பும்...
விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது ஒருபுறம் என்றால், அந்தப் படத்திற்கு பல்வேறு முனைகளில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. விஸ்வரூபம் படத்திற்கான தடை, படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன. எனினும் புதுமையை விரும்பும் கமல்ஹாசனின் முயற்சிக்கு திரைத்துறையில் இருந்து ஆதரவு குரல் ஒலிக்கிறது.
மலேசியாவிலும் விஸ்வரூபத்திற்கு தடை
இதனிடையே, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவிலும், விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்கு அந்நாட்டு அரசும் தடை விதித்திருப்பதாக சென்னை வந்துள்ள மலேசிய ஒளிபரப்புத்துறை அமைச்சர் டெனிஸ் டீகுரூஸ் தெரிவித்துள்ளார். மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் எந்தப் படத்தையும் திரையிட மாட்டோம் என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.
ஒரு திரைப்படத்திற்கு தடை விதிக்க நேரும் போது அதனை சட்ட ரீதியாக செய்ய வேண்டும் என மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறியிருக்கிறார்.
ஒரு திரைப்படத்திற்கு தடை விதிக்க நேரும் போது அதனை சட்ட ரீதியாக செய்ய வேண்டும் என மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறியிருக்கிறார்.
இலங்கையிலும் தடை: விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அந்நாட்டு அமைச்சரவை செய்தி தொடர்பாளர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டதாக இலங்கை திரைப்பட தணிக்கை துறை கூறியுள்ள போதிலும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனக்கும் சமூகப் பொறுப்பு உண்டு - கமல்
விஷ்வரூபம் திரைப்படம் மத்திய தணிக்கை குழுவின் அனுமதியை பெற்றே வெளியிடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், தான் பார்த்த படங்களிலேயே இந்த திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு நட்பான படமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து பேட்டி அளித்த அவர், இந்தியாவில் 500 திரையரங்குகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வளவு எளிதாக அதை வெளியிடாமல் இருக்க முடியாது. மத்திய தணிக்கை குழு படத்தைப் பார்த்து கேள்விகள் கேட்டு அதன் பின்னரே அனுமதி அளித்தார்கள். அந்தக்குழுவிலும் இஸ்லாமியர் உட்பட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதிகள் உண்டு. அந்தக்குழு படத்தின் எந்தப்பகுதியையும் நீக்கச் சொல்லவில்லை. ஆனால், ஏ சான்றிதழ் கொடுத்தார்கள். மேலும், பி.ஜி எனப்படும் பெற்றோர் வழிகாட்டல் தேவை என்ற சான்றிதழ் அளித்திருக்கிறார்கள் என்றார்.
"தடைவிதிக்கக் கூடாது"
விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில், தமிழக அரசு உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைக் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என மத்தியத் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ்திவாரி தெரிவித்துள்ளார். மத்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கிய பின்னர், அத்திரைப்படத்திற்கு தடைவிதிப்பது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய திரைப்பட தணிக்கை குழு ஒரு குறிப்பிட்ட முடிவு எடுத்து சான்றிதழ் அளித்துவிட்டால் அது மாநிலங்களின் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும். எனவே, எந்த முடிவும் எடுக்கும் முன், பிரகாஷ் ராஜ் வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசு பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்றம் அளித்துள்ள தெளிவான உத்தரவை மீறுவதாக அமைந்துவிடும் என்றார்.
தடை கண்ட படங்கள்...
இந்தியாவில் முதன் முறையாக தடை செய்யப்பட்ட திரைப்படம் நீல் அகாஷர் நீச்சே என்ற பெங்காலி மொழிப்படம்.
பிரிட்டிஷ் இந்தியாவின் இறுதிக் காலகட்டத்தில், இந்தியாவுக்கு நாடோடியாக வந்த சீனருக்கு நேர்ந்த அவதியே இப்படத்தின் மையக்கரு. மிருணாள் சென் இயக்கிய இந்தப் படத்திற்கு 1959ல் விதிக்கப்பட்ட தடை, சுமார் 2 ஆண்டுகள் அமலில் இருந்தது.
இதன் பின்னர் 1963ல் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே தொடர்பான நைன் ஹவர்ஸ் டூ ராமா என்ற படத்திற்கும்,
1971ல், பிரபல இயக்குனர் சத்யஜித் ரே இயக்கிய சிக்கிம் என்ற படத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.
1971ல், பிரபல இயக்குனர் சத்யஜித் ரே இயக்கிய சிக்கிம் என்ற படத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில், கடந்த 1987ம் ஆண்டு வெளியான ஒரே ஒரு கிராமத்திலே என்ற திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இட ஒதுக்கீட்டை விமர்சனம் செய்த இப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தயாரிப்பாளர் ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
இட ஒதுக்கீட்டை விமர்சனம் செய்த இப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தயாரிப்பாளர் ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய ஃபயர் படத்திற்கு 1996ல் தடை விதிக்கப்பட்ட போதிலும், அந்தப் படம் மீண்டும் திரையிடப்பட்டது.
ராஜிவ் காந்தி படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகை படத்திற்கு 1992ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை, 15 ஆண்டுகளுக்குப் பின்னரே நீக்கப்பட்டது.
ராஜிவ் காந்தி படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகை படத்திற்கு 1992ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை, 15 ஆண்டுகளுக்குப் பின்னரே நீக்கப்பட்டது.
கடந்த 2006ம் ஆண்டு டாவுன்சி கோட் என்ற ஆங்கில திரைப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், அந்த தடையை உயர் நீதிமன்றம் பின்னர் நீக்கியது.
2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட டேம் 999 திரைப்படம், முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கூறி தமிழக அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து இயக்குனர் சோகன் ராய் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டும், படத்திற்கான தடை நீக்கப்படவில்லை.
-பசுமை நாயகன்