சென்னை புத்தக கண்காட்சி இன்று மாலை நந்தனம் YMCA மைதானத்தில்
தொடங்குகிறது. கடந்த 35 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சென்னை புத்தக கண்காட்சி
முதல்முறையாக நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்
அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கென மொத்தம் 750 அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 5
லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி புத்தகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கண்காட்சி
ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
13 நாட்கள் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சி வார நாட்களில் பிற்பகல் 2 மணி
முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9
மணி வரையும் நடைபெறும். தமிழ் புத்தகங்களை வாசிப்பதில் இளைஞர்களிடம்
ஏற்பட்டு வரும் ஆர்வம் காரணமாக புத்தகங்களின் விற்பனை நாளுக்கு நாள்
அதிகரித்து வருவதாக தெரிவிக்கும் பதிப்பகத்தார், அரசும் நூலகங்களுக்காக
புத்தகங்களை வாங்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
புத்தக விற்பனை மட்டுமின்றி கலை நிகழ்ச்சிகளும் கருத்தரங்கங்களும்
நாள்தோறும் நடைபெற உள்ளன. இவை மட்டுமின்றி உணவகங்களும், திண்பண்ட
விற்பனையகங்களும் அமைய உள்ளன. இம்முறை நகரின் மையப்பகுதியில் கண்காட்சி
அமைக்கப்பட்டுள்ளதால், சுமார் 12 லட்சம் வாசகர்கள் வரக்கூடும் என
எதிர்பார்ககப்படுகிறது.
.-பசுமை நாயகன்