காவிரி நீர் பற்றாக்குறையால் சம்பா நெற்பயிரையும் இழந்த விவசாயிகள்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடியவிடிய போராட்டத்தில்
ஈடுபட்டனர். நேற்று காலை முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள்,
கொட்டும்பனியிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
விவசாயிகள் அனைவரும் தரையில் உட்கார்ந்தபடியும் படுத்தபடியும்
விடியவிடிய முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்டத்தை வறட்சி
மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்திய அவர்கள், பயிர் இழப்பீடு நிவாரணத் தொகையை
உடனே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல திருவாரூர் மாவட்டத்திலும் இரவு முழுவதும் போராட்டம் நீடித்தது.
-பசுமை நாயகன்