சமுதாய எழுச்சிக்காக எனக்குப் பின்னர் ஸ்டாலின் பாடுபடுவார் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று, கருணாநிதி முன்னிலையில்,வேலூர் மேற்கு மாவட்டம் பா.ம.க.,
செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 800 பா.ம.க., வினர்
தி.மு.க., வில் இணைந்தனர்.சென்னையில் கலைஞர் அரங்கில் இந்த விழா
நடைபெற்றது.
அவர்கள் அனைவரையும் ஸ்டாலின் ஷால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர்
உரையாற்றிய கருணாநிதி என் உயிர் உள்ளவரை தமிழ் இனத்துக்காக,
சமுதாயத்துக்காக பாடுபடுவேன் என தெரிவித்தார். என் காலத்திற்குப் பிறகு
ஸ்டாலின் பாடுபடுவார் என தெரிவித்தார்.
ஏற்கனவே ஸ்டாலின் - அழகிரி இடையே கருணாநிதிக்குப் பின் கட்சி தலைமை
பொறுப்பை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பாக பல முறை வெளிப்படடையாகவும்,
எப்போதுமே மறைமுகமாகவும் பூசல் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே.
தவிர தி.மு.க., நாடாளுமன்ற கூட்டஙகள் அனைத்திலும் ஸ்டாலினே
முன்னிறுத்தப் படுகிறார். இந்தச் சூழலில் கருணாநிதி இவ்வாறு
அறிவித்திருப்பது தி.மு.க., வட்டாரத்தில் குறிப்பாக அழகிரி தரப்பில்
இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில்
அழகிரி தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட இருப்பதால். அப்போது தென்
மாவட்டங்களில் அவரது பலத்தை நிரூபிக்க அழகிரி முற்படுவார் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.
-பசுமை நாயகன்