அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இரண்டாவது முறையாக ஞாயிற்றுகிழமை மீண்டும் பதவியேற்றார்.
தேர்தலில் வெற்றி பெறுபவர், அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டப்படி ஜனவரி 20-ம் தேதி பதவியேற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் ஒபாமா பதவியேற்றுக்கொண்டார். இதில், அதிபரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஞாயிற்றுகிழமையில், முக்கியமான அரசு அலுவலகங்கள் இயங்காது என்பதால், நாளை அதிபர் மற்றும் துணை அதிபர் பதவி பிரமாண நிகழ்ச்சிகள் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் பதவி பிரமாண நிகழ்ச்சி வெள்ளை மாளிகைக்கு வெளியில் நடைபெற உள்ளது. இதில், நாட்டு மக்களுக்கும் அவர் உரையாற்றவுள்ளார். இதற்கென பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-பசுமை நாயகன்