"இந்தியா 2020"திட்டம் அடுத்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 10 சதவிகிதம் உயர்த்தி, அதை நிலை நிறுத்த வழிவகை செய்யும் என குடியரசு முன்னாள் தலைவர் ஏ பி ஜெ அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, எளையாம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த இளைஞர் எழுச்சி நாள் விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், இதனை தெரிவித்தார். இந்த இலக்கை எட்ட மத்திய மாநில அரசுகள் மட்டும் முயன்றால் போதாது என்று கூறிய கலாம், இளைய சமுதாயமும் நம்பிக்கையுடன் உழைத்தால் இந்தியா எழுச்சி பெறும் என்றார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற நாடாகவும், வளமான நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும் என்று கூறிய அப்துல் கலாம், இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வர எழுச்சி மிக்க எண்ணம் கொண்ட இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டா
.-பசுமை நாயகன்