வீட்டில் இருந்தபடியே, கணிப்பொறியின் மென்பொருள்களை கற்றுக் கொள்ளும் வகையிலான டிவிடிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதம்:
கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது தமிழ்வழி மென்பொருள் கல்வி. மென்பொருள் கற்கும் வசதி இல்லாத கிராமப்புறங்களில் வாழும் மாணவர்கள், அதை கற்பதற்கு பல்வேறு தடைகளை தாண்ட வேண்டியுள்ளது. அவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமலேயே, தமிழிலில் ஒலியுடன் கூடிய மென்பொருள் கற்பிக்கும் டிவிடிக்கள் வெளிவந்துள்ளன. சென்னை புத்தக கண்காட்சியில் இந்த டிவிடிகள் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.
உதாரணமாக, எம்எஸ் வேர்டு என்றால், ஏழு மணி நேரம் கொண்ட டிவிடியில் அதன் அனைத்து விவரங்களும் தமிழில் ஒலி வசதியுடன் இடம்பெற்று இருக்கும். இவற்றை வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்ளலாம். அலுவலங்களுக்கு செல்வோரும், இதுபோன்ற மென்பொருள்களை கற்பதற்காக, கல்வி மையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே எளிதாக கற்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 20 மென்பொருள்கள் இதுபோன்று தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தாக்கம் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை சென்றால், வருங்காலம் மாணவர்களின் வசமாகும் என்பது உறுதி.
-பசுமை நாயகன்