காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை அரசிதழில் வெளியிட வேண்டும்
என்பதில் திமுகவிற்கோ, அதிமுக.விற்கோ எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என
திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில், இதனை குறிப்பிட்டுள்ளார்.
மின் தட்டுப்பாடு ஏற்பட்ட பிறகே , 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர்
புதிய அனல் மின் நிலையத்தில், உற்பத்தியைத் தொடங்க அதிமுக அரசு முனைப்பு
காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருந்தால், 2012 ஆம்
ஆண்டிலே , மேட்டூர் புதிய அனல் மின்நிலையம் பயன்பாட்டிற்கு வந்திருக்கும்
என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மின் இணைப்புகளை சரியாக, முறையாகப் பராமரிக்கவே போதுமான ஆட்கள் இல்லாமல்
மின்வாரியம் தடுமாறி வருவதாகவும் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
மின்வாரியத்தில் 56 ஆயிரத்து 758 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அவர்
குறிப்பிட்டார்.
-பசுமை நாயகன்