அதிகாரிகள்,அமைச்சர்கள் தொலைபேசிகளுக்கு பயன்பாட்டு உச்சவரம்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
*************************************************************************************************************
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
10 டன் எடையுள்ள எரிகல் - 3 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டடங்கள் சேதம்
அரசு அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் வீட்டு தொலைபேசிகளுக்கான, பயன்பாட்டு உச்சவரம்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்துடன், இந்த சிக்கன நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இதன்படி, அரசு செயலர்கள் மற்றும் கூடுதல் செயலர்கள், மாதம் 1300 ரூபாய் கட்டணம் வரை, வீடுகளில் பயன்படுத்தும் தொலைபேசிகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைத் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியாளர்கள் வீடுகளில் உள்ள தொலைபேசிகளுக்கான பயன்பாட்டு உச்சவரம்பு 800 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர அலுவலர்களுக்கு மாதம் 600 ரூபாய் என்ற உச்சவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
*************************************************************************************************************
வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட
தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் இன்று
இடைக்கால தடை விதித்தது.
தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் இன்று
இடைக்கால தடை விதித்தது.
நாளை மறுதினம் புதன்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கர்நாடக போலீசார் 22 பேரை கடந்த 1993ம் ஆண்டு வெடிகுண்டு வைத்து கொன்ற வழக்கில், வீரப்பன் கூட்டாளிகள் பிலேந்திரன், மீசை மாதையன், வீரப்பனின் அண்ணன் ஞானபிரகாசம், சைமன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதுகுறித்து இவர்களின் வக்கீல் சாந்தி போன்சீனா பெல்காமில் நேற்று கூறுகையில், ‘தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 4 பேருக்கு தண்டனை தேதி உறுதி செய்யப்படாததால் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது என்றார். இதற்கிடையில், பெல்காம் இன்டலகா சிறைக்கு, சிறை அதிகாரி வீரபத்ரசாமி நேற்று காலை 5.30 மணிக்கு வந்தார். அங்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது பற்றி நீதிபதி, மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்டலகா சிறை துணை கண்காணிப்பாளர் கல்லூரா, மைசூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மோகன் ஸ்ரீபத் சங்கோலியிடம் 2 மனுக்கள் கொடுத்தார். முதல் மனுவில், ‘வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு 2004ம் ஆண்டு தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இவர்களுடைய கருணை மனுக்களை ஜனாதிபதி கடந்த வாரம் நிராகரித்துவிட்டார்.
எனவே, 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற தேதி அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இரண்டாவது மனுவில், இந்த வழக்கில் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான ரகசியங்களை காக்கும் பிளாக் ரிப்போர்ட் வழங்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், 4 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவை, தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள் கூறுகையில், மனு முறைப்படி இல்லை. எனவே, தள்ளுபடி செய்கிறோம். மனுதாரர்கள் விரிவான மனு தாக்கல் செய்யலாம். புதன்கிழமை வரை 4 பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கிறோம் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை அடுத்து மைசூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள் மீதான விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆனால், 4 பேருக்கு தண்டனை தேதி உறுதி செய்யப்படாததால் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது என்றார். இதற்கிடையில், பெல்காம் இன்டலகா சிறைக்கு, சிறை அதிகாரி வீரபத்ரசாமி நேற்று காலை 5.30 மணிக்கு வந்தார். அங்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது பற்றி நீதிபதி, மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்டலகா சிறை துணை கண்காணிப்பாளர் கல்லூரா, மைசூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மோகன் ஸ்ரீபத் சங்கோலியிடம் 2 மனுக்கள் கொடுத்தார். முதல் மனுவில், ‘வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு 2004ம் ஆண்டு தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இவர்களுடைய கருணை மனுக்களை ஜனாதிபதி கடந்த வாரம் நிராகரித்துவிட்டார்.
எனவே, 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற தேதி அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இரண்டாவது மனுவில், இந்த வழக்கில் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான ரகசியங்களை காக்கும் பிளாக் ரிப்போர்ட் வழங்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், 4 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவை, தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள் கூறுகையில், மனு முறைப்படி இல்லை. எனவே, தள்ளுபடி செய்கிறோம். மனுதாரர்கள் விரிவான மனு தாக்கல் செய்யலாம். புதன்கிழமை வரை 4 பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கிறோம் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை அடுத்து மைசூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள் மீதான விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
10 டன் எடையுள்ள எரிகல் - 3 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டடங்கள் சேதம்
ரஷ்யாவின் உரால் பகுதியில், எரிகல் விழுந்த இடத்தில் ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன. சிதறி விழுந்த எரிகல்லின் எஞ்சிய பகுதிகளை சேகரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
உரால் பகுதியில் உள்ள செல்யாபின்ஸ்க் நகரில் நேற்று முன்தினம் 10 டன் எடையுள்ள எரிகல் ஒன்று, விண்ணில் இருந்து நெருப்பைக் கக்கியபடியே விழுந்து சிதறியது. இதில் அப்பகுதியில் இருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்தன. ஆயிரத்து 200 பேர் காயமடைந்தனர்.
இந்த எரிகல்லில் இருந்து சிதறிய ஒரு பகுதி, அங்குள்ள செபர்குல் ஏரியில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த எரிகல் துண்டை சேகரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
பனிப் பொழிவின் காரணமாக ஏரியின் மேற்பகுதி உறைந்து போயிருந்தாலும், ஏரிக்குள் இருப்பதாக கூறப்படும் எரிகல் துண்டுகளை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே, எரிகல் விழுந்த போது ஏற்பட்ட பாதிப்பில், 2 லட்சம் சதுரடி அளவுள்ள கண்ணாடிகள் உடைந்தன. இதன் எதிரொலியாக கண்ணாடிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு செல்யாபின்ஸ்க் நகரில் உயர்ந்துள்ளன.