Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

15 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கியமான அரசியல் படுகொலைகள்
       அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. இதுபோன்று கொலைகளை அரங்கேற்றுவது யார்? அதற்கான காரணங்கள் என்ன ?
ஊராட்சித் தலைவர் வெட்டிக் கொலை, அரசியல் பிரமுகர் வெடிகுண்டு வீசிக் கொலை என்பன போன்ற செய்திகள் நாள் தவறாமல் ஊடகங்களில் இடம்பெறுகின்றன.

      உதாரணமாக, 2011 ஆம் ஆண்டு அக்டோபர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து அமைப்பு தலைவர்களில் 37 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
     இதில் சென்னையை அடுத்த காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 13 பஞ்சாயத்து தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ந்து வரும் நிலையில், அத்தொழிலில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்களே அதிகம் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
  இதேபோன்று, ஒரு சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும் பலியாகியிருக்கிறார்கள்.
   முக்கிய பிரமுகர்களின் கொலைச் சம்பவங்களில் கூலிப்படையினருக்கு பெரும்பங்கு இருப்பது பல்வேறு நிகழ்வுகளில் தெரியவந்துள்ளது. கடந்தகால குற்ற வழக்குகளின் விசாரணைகளும் பின்னணியும் இந்த தகவலை உறுதி செய்கின்றன.
  எதிரிகளை பழிவாங்குவதற்காக கூலிப்படையினரை அதிகம் பயன்படுத்துவது அரசியல் பிரமுகர்களே என்ற குற்றச்சாட்டையும் பார்க்க முடிகிறது.
  உள்ளூரில் அடிதடி மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வளர்ச்சியடையும் ஒருவர், தனது பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகளில் சேர்வது வழக்கமாகிவிட்டது.
அவ்வாறு அரசியலில் நுழைந்து ஒரு பொறுப்பிற்கு வரும்போது அவர்களுக்கு எதிரிகளும் உருவாவதாக கூறுகின்றனர் குற்றவியல் துறை ஆய்வாளர்கள்.
    தொழில் போட்டி, முன்விரோதம், அரசியல் காழ்ப்புணர்ச்சி என பல காரணங்கள், அரசியல் பிரமுகர்களின் கொலைகளுக்குப் பின்னால் இருந்தாலும், இதுபோன்ற குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 
லீலாவதி
1997ம் ஆண்டு மதுரையில் பட்டப்பகலில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் லீலாவதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு, அதில் ஒரு சிலர் விடுதலையும் ஆகியுள்ளனர்.
தா.கிருட்டிணன்திமுக., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், கடந்த 2003ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 15 பேர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார்? என்பது இதுவரை தெரியவில்லை .
இதே போன்று, திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, கடந்த 2004ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது
திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளராக இருந்த பூண்டி கலைச் செல்வம் 2007ம் ஆண்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் 2010ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி புதுக்கோட்டையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை தீர்ப்பு அளிக்கப்படவில்லை.
தேவேந்திர வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன்திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் கடந்தாண்டு வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.
அண்மையில் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை வழக்குகளில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டதாகும். கடந்த ஆண்டு மார்ச் 28ம் தேதி நடைபயிற்சியின்போது கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தற்போது, சிபிசிஐடி போலீஸ் விசாரணையின் வசம் இந்த வழக்கு உள்ளது.
பாரதிய ஜனதா மாநில மருத்துவ பிரிவு மாநில செயலாளராக இருந்த மருத்துவர் அர்விந்த் ரெட்டி, கடந்தாண்டு வேலுாரில் அக்டோபர் 25 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கும் தற்போது விசாரணையில் உள்ளது.
இந்த பட்டியலில் இறுதியாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷ் மதுரையில் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

                                                                 -பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING