ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில், சி.பி.ஐ. அதிகாரிகள் வரும் 12-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் பி.சி.சாக்கோ உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் போதிய ஆதாரங்கள் சேகரிப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து ஆதாரங்களும் தொலைத்தொடர்பு செயலர் சந்திரசேகரிடம் வரும் 12-ம் தேதி சமர்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2ஜி விவகாரம் குறித்த ஆதாரங்கள் கூடிய விரைவில் வரையறுக்கப்படும் என்றும் கூறியுள்ள சாக்கோ, வரும் 21-ம் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைவதற்குள் இதுதொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.