Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com
வேலை நிறுத்தம் காரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் 


   பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில், இன்றும், நாளையும், வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. நாடு தழுவிய இந்த வேலை நிறுத்தத்தால், பொருளாதார ரீதியில் மட்டுமல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அதேசமயம், அத்தியாவசியப் பொருட்களின் சேவை பாதிக்கப்படாது என்று தொழிற்சங்கங்கள் உறுதியளித்துள்ளன.
   புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், போனஸ், பணிக் கொடைக்கான உச்சவரம்பை நீக்க வேண்டும், தொகுப்பூதிய முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் அறிவித்த 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என அசோசெம் அமைப்பு எச்சரித்துள்ளது.
  வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தேயிலைத் தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து துறையினரும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். கேரளா மற்றும் திரிபுராவில், பெரும்பாலான துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அங்கு மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
   மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா, குஜராத், தமிழகம், டெல்லி, ஹரியானா, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், வேலைநிறுத்தத்தின் பாதிப்பு இருக்கும் என அசோசெம் தலைவர் ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த இந்த 2 நாள் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.


***********************************************************************************

பாலச்சந்திரன் சுடப்பட்டு இறந்து 
கிடக்கும் காட்சியும் பதிவாகி இருப்பதாக சேனல் 4 நிறுவனம் தெரிவித்துள்ளது.   விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயதேயான இளைய மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினால் திட்டமிட்டு, துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது குறித்த நிழல்படக் காட்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தப் நிழற்படங்கள் முற்றிலும் உண்மையானது என சேனல் 4 நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
    கடந்த 2009ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் முடக்கப்பட்ட விடுதலைப் புலிகளை மட்டுமல்லாமல், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களையும் இலங்கை ராணுவம் ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்தது. அந்த வரலாற்றுக் கொடூரத்தின் ரத்தச் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட நிழற்படங்களை சேனல் 4 நிறுவனம் தற்போது வெளியிட்டு உள்ளது.
  முதல் படத்தில் மணல் மூட்டைகளுக்கு நடுவே, ஆடையில்லாத உடலுடன் கைலியைப் போர்த்தியபடி பாலச்சந்திரன் அமர்ந்திருக்கும் காட்சியும், அடுத்த படத்தில் அந்தச் சிறுவன் எதையோ சாப்பிடும் காட்சியும் உள்ளது.
   இந்த இரண்டு படங்களையும் எடுத்த கேமிராவில்தான், பாலச்சந்திரன் சுடப்பட்டு இறந்து கிடக்கும் காட்சியும் பதிவாகி இருப்பதாக சேனல் 4 நிறுவனம் தெரிவித்துள்ளது.
     ஆனால், இந்த புகைப்படங்கள் போலியானவை என இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்துள்ளார்.

    சேனல் 4 ஆவணப்படத்தின் இயக்குநர் கெலம் மெக்ரே, இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை என்றும், இலங்கை ராணுவத்தினரின் கொடூரச் செயல்கள் பதிவாகி உள்ள மேலும் சில வீடியோ காட்சிகளை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வில் அழுத்தம் கொடுக்குமா இந்தியா?
    கடந்த 2012ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து, தீர்மானத்தில், இலங்கை அரசு உருவாக்கிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும்,     அதற்கான செயல் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், மற்றொரு தீர்மானத்தை அடுத்த மாதம் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
   அந்த தீர்மானத்தில் என்ன விதமான கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என்ற தகவல் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனிடையே சேனல் 4 தொலைக்காட்சியின் போர்க்குற்ற சாட்சிகள் அடங்கிய ஆவணப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இலங்கையின் போர் குற்றம் குறித்த விவகாரத்தில், இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே இலங்கைக்கு எத்தகைய அழுத்தம் கொடுக்கப்படும் என்பது தெரிய வரும்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING