தமிழகத்தில் விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் தென்பகுதிகளில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வடக்குப் பகுதிகளிலும் புதுச்சேரி, கேரள மாநிலங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், நெல்லை, தூததுக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பல இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.
-பசுமை நாயகன்