Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் 
வித்யா சிகிச்சைப்பலனின்றி இன்று 
காலையில் அவர் மரணமடைந்தார்.  சென்னை ஆதம்பாக்கத்தில் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட இளம்பெண் வித்யா சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
  சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் வித்யா மீது கடந்த மாதம் 30 ஆம் தேதி விஜய்பாஸ்கர் என்பவர் ஆசிட் வீசினார். திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட விஜய்பாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
  அமிலம் வீசப்பட்டதால் முகம், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்ட வித்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் வித்யா. இந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயும் அவரை தாக்கியது. இதனால், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, வித்யா சிகிச்சைப் பெற்று வந்தார். எனினும், சிகிச்சைப்பலனின்றி இன்று காலையில் அவர் மரணமடைந்தார்.
    அண்மையில் நடந்த ஆசிட் வீச்சு சம்பவங்கள் பற்றிய விபரம்:
  ஒரு தலைக்காதல் விவகாரத்தில், கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி காரைக்காலில் அமில வீச்சுக்கு ஆளான மென்பொருள் பொறியாளாரான வினோதினி, கடந்த 12 ஆம் தேதி சென்னை அரசு பொதுமருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த நிலையில், அமில வீச்சுக்கு வித்யாவும் பலியாகியுள்ளார்.
  டிசம்பர் 2012, 30-ம் தேதி அன்று உத்தரப்பிரதேசத்தில் முஸாஃபர்நகரில் இரண்டு பெண்கள் மீது திராவகம் வீசியதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.
****************************************************************************************************************


ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பகுதியில் இந்த இரட்டை குண்டுவெடிப்பு

ஆந்திரப் பிரதேசத் தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று மாலை 7 மணியளவில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன.

ஹைதராபாத் தில்சுக் நகரில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்: குண்டு வெடிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
விசாரணை மேற்கொள்ள மாநில அரசு தனிப்படை அமைத்துள்ளதாக தெரிவித்த அவர் விசாரணை நடைபெற்று வருவதால் மேற்கொண்டு தகவல்களை பகிர முடியாது என்றார்.
  இரண்டு நாட்களுக்கு முன்னர் குண்டுவெடிப்பு குறித்து பொதுவாக எச்சரிக்கை கிடைத்ததாகவும், அது தொடர்பாக நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டதாக கூறினார்.
  குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாகவும், 119 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறினார்.
  உயிர் இழந்தவர்களில் 8 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவம்: ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பகுதியில் இந்த இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இரண்டு குண்டுகளுமே மிதிவண்டியில் பொருத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வெடிக்க வைக்கப்பட்டிருக்கிறது.
  முதல் வெடிகுண்டு, கோனார்க் திரையரங்கம் அருகில் வெடித்தது. அடுத்த ஒருசில நிமிடங்களிலேயே, இரண்டாவது வெடிகுண்டு 100 மீட்டர் தூரத்தில், வெடித்தது. படம் முடிந்து மக்கள் திரையரங்கில் இருந்து வெளியே வந்த சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைந்து விட்டது. குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்கள் உஸ்மானியா அரசு மருத்துவமனை, யசோதா மருத்துவமனை, ஓம்னி மருத்துவமனை உள்ளிட்ட 7 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் சக்தி வாய்ந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆந்திரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்த, மாநில காவல்துறைத் தலைவர் தினேஷ் ரெட்டி, இதன் காரணமாகவே, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு வளையத்தில் ஹைதராபாத்: ஹைதராபாத் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த சம்பவத்தை அடுத்து, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இது பயங்கரவாத அமைப்புகளின் சதிச் செயல்தான் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் தினேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, தில்சுக் நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
  மேலும், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் தடயங்களை சேகரிப்பதற்காக, அப்பகுதியைச் சுற்றி சுமார் 2 கிலோ மீட்டர் அளவிற்கு போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த குழுவினர் குண்டு வெடிப்பு குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில், அமைக்கப்பட்டிருந்த CCTV கேமராவில் உள்ள பதிவுகள் குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு முக்கிய ஆதாரமாக திகழும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஹைதராபாத் குண்டு வெடிப்பை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நேரில் ஆய்வு: குண்டுவெடிப்பு நிகழ்வை அடுத்து, ஆந்திர மாநில முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார். மாநில உள்துறை அமைச்சர் சபிதா ரெட்டியும் உடன் வந்திருந்தார். சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த கிரண் குமார் ரெட்டி, இது கோழைகளின் செயல் என்றார். சம்பவத்தை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அசம்பாவித சம்பவங்கள் தொடராமல் தடுக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
  குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்த கிரண் குமார் ரெட்டி, காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்றார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு பாதிப்புக்கு ஏற்ப, ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.
மத்திய அரசு வேண்டுகோள்: நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது கொடூரமான தாக்குதல் என்று கூறியுள்ள பிரதமர் மன்மோகன்சிங், குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றார். மேலும், அமைதி காக்குமாறு அவர், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறைகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மத்திய புலனாய்வுத் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் ஐதராபாத் விரைந்துள்ளனர்.
"அரசியலாக்க வேண்டாம்": குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
"முழு விசாரணை தேவை": இந்த தாக்குதல் சம்பவம், பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு விடுத்துள்ள சவால் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. விசாரணை விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
நிவாரணத் தொகை அறிவிப்பு:தெலுகு தேசம், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் குண்டுவெடிப்பு சம்பவத்தைக் கண்டித்துள்ளதோடு, பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன. குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING