குஜராத் முதலமைச்சராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், நரேந்திர மோதி, இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோதி, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும், குஜராத்தில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததற்காக பிரதமர் பாராட்டு தெரிவித்ததாகவும் கூறினார்.
பிரதமர் உடனான சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாகவும், மிகவும் பயனுள்ளதாக இந்த சந்திப்பு இருந்ததாகவும் மோதி தெரிவித்தார். குஜராத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைத்ததாக குறிப்பிட்ட மோதி, நர்மதா நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்த பிரதமரிடம் உதவி கோரியுள்ளதாகவும் கூறினார்.
டெல்லி, ஸ்ரீராம் கல்லூரியில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியிலும் மோதி பங்கேற்க உள்ளார்.