Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

குறைந்து கொண்டே போகும் விவசாயம்


இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியை தாண்டி சென்று கொண்டே இருக்கிறது. அத்தனைப் பேருக்கும் உணவு அளிக்க வேண்டிய விவசாயத்துறை குறைந்து கொண்டே போகிறது. விவசாயிகள் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். முன்பெல்லாம் நமது முன்னோர்கள் செலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்து வந்தனர். பசுமை புரட்சி விவசாயத்தை பசுமை ஒரு பெரும் மூலதனம் போட்டு செய்ய வேண்டிய தொழிலாக இருந்து வருகிறது. விவசாயத்தை விட்டுவிட்டு கிராமமக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இப்படியே போனால் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தானியங்கள் கிடைக்காது பஞ்சம் ஏற்படும் அபாயம்முள்ளது. அரசு விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கவேண்டும். 
                    தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பு சுமார் 130 லட்சம் ஹெக்டேர். இதில் நீர்பாசனவசதி இருப்பதாக கருதப்படுகிற நிலம் சுமார் 33 லட்சம் ஹெக்டேர்தான். நீர்பாசன வசதியற்ற, வானம் பார்த்த பூமியாக இருக்கும் நிலப்பரப்பு சுமார் 37 லட்சம் ஹெக்டேர்ராகும் ! அதாவது நாம் மொத்த நிலப்பரப்பான 130 லட்சம் ஹெக்டேரில் சுமார் 70 லட்சம் ஹெக்டேரைதான் விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம். இது மேலும் நகரமயம் என்று குறைந்து கொண்டே போகிறது...! 2020-ல் பஞ்சம் ஏற்படுவது உறுதி...!.........?


                                                                                                            -பசுமை நாயகன்.தமிழக அமைச்சரவையில் 46 வயதான பி.வி ரமனா தான் இளம் வயது அமைச்சர்.
ம் இந்திய தேசத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் முக்கிய சக்தியாக இருக்க வேண்டியது அரசியல். ஆனால், இன்றைய அரசியலோ அதற்கு நேரெதிரான திசையில் சமூகத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
   இந்த நிலையை மாற்றி, நம் தேச நலனைக் காக்க இளைஞர்களின் பங்களிப்பு அரசியலில் அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்படுகிறது. இந்த கருத்தை வலியுறுத்தி சில தமிழ் படங்களும் வெளிவந்துள்ளன.
இளைஞர்கள் அரசியலை ஊக்குவித்த சில தமிழ்படங்கள் குறித்த சுவாரஸ்ய தொகுப்பு:
  இன்றைய சூழலில் அரசியல் கட்சிகள் தனியார் நிறுவனங்களைப் போலவே இயங்குகின்றன. அரசியலில் இருக்கும் சில இளைஞர்களும் கூட அரசியல் வாரிசுகளே ,தங்கள் பெயருடன் மூதாதையர்களின் பெயர்கள் இணைந்துவிட்டது மட்டுமே இவர்களின் அரசியல் தகுதியாக மாறிவிட்டது.
  மக்களின் பிரச்சனைக்காக போராட வரும் இவர்கள் யாவருமே சராசரி மக்களிடம் பழகியது கூட கிடையாது. இப்படி மக்களிடமிருந்து அந்நியப்பட்டு கொண்டிருக்கும் அரசியலை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வலிமை நம் இளைஞர்களிடையே இருக்கிறது. அதன் பொருட்டு, இத்தகைய கருத்துக்களை கொண்ட சில தமிழ் சினிமாக்கள் வந்திருப்பது ஆரோக்கியமான விஷயமே.
  • தற்போதைய 15வது மக்களவையின் இளம் வயது உறுப்பினராக இருப்பவர் லக்ஷட்வீப் தீவுகளைச் சேர்ந்த அகமது ஹம்துல்லா சயீது. இவருக்கு வயது 31.
  • இவருக்கு அடுத்ததாக 32 வயதான அகதா சங்மா, 35 வயதான சச்சின் பைலட், 36 வயதான மிலிந்த் தியோரா போன்றவர்கள் மக்களவையின் இளம் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
  • தற்போதிருக்கும் முதலமைச்சர்களில், 39 வயதான அகிலேஷ் யாதவ் தான் வயதில் குறைந்தவர். இவர் உத்திர பிரதேசத்தின் முதல்வராவார்.
  • தற்போதிருக்கும் இந்திய மக்கள் தொகையில் 50% மேலானோர் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள்.
  • இவர்களில் 57% மேலானோர் ஓட்டு போடுவதில்லை
  • மொத்தமிருக்கும் 543 மக்களவை உறுப்பினர்களில் 30 பேர் மட்டுமே 35 வயதிற்குட்பட்டவர்கள்.
  • தமிழக அமைச்சரவையில் 46 வயதான பி.வி. ரமனாதான் இளம் வயது அமைச்சராவார். இவர் தமிழகத்தின் வணிகவரி மற்றும் முத்திரைத்தாள் துறை அமைச்சராக உள்ளார்.
நம் இந்திய தேசத்தில் இளைஞர்களின் அரசியல் பங்கெடுப்பு இந்தளவில் தான் உள்ளது.
இளைஞர்களின் துடிப்பும், சீரிய சிந்தனையும், கடும் உழைப்பும் வளமையான நாளைய சமுதாயத்தை உருவாக்கும். அதற்கு, இளைஞர்கள் அரசியல் களத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்தது ஆயுத எழுத்து திரைப்படம்.

இந்தியாவில் கல்வி பயிலும் எத்தனையோ மாணவர்கள் வெளிநாடுகளில் தங்கள் உழைப்பைக் கொடுத்து அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றனர். அதே சமயத்தில், தாங்கள் சார்ந்த சமுதாயத்திற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியையும் இப்படம் எழுப்பியது. கல்லூரி தேர்தலில் நிற்கும் ஓர் இளைஞர், தவறான அரசியல்வாதியால் எப்படி அரசியல் களத்திற்குள் காலெடுத்து வைக்கிறார் என்ற கதையை சொன்னது "ஜி" திரைப்படம். தயாரிப்பு நிலையிலும், நடிகர் - இயக்குநர் மோதலிலும் பல தடைகளையும், தாமதத்தையும் கடந்து 2005 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. லிங்குசாமி இயக்கியிருந்த இப்படத்தில் அஜித், த்ரிஷா, வெங்கட்பிரபு, மணிவன்னன் உட்பட பலரும் நடித்திருந்தனர்.

இளைஞர்களில் அரசியல் பங்கெடுப்பு வளமான தேசத்தை உருவாக்கும் என்ற கருத்தில் வெளிவந்த படம் புதிய மன்னர்கள். விக்கிரமன் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம், மோகினி, விவேக் ஓன்ற பலரும் நடித்திருந்தனர். 1995ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏ. ஆர். ரஹ்மான்.

பத்திரிக்கைத் துறை, நக்சல் குழுக்கள் என பல விஷயங்களை பேசிய "கோ" திரைப்படம், இளைஞர்களின் அரசியல் வருகைக் குறித்தும் பதிவு செய்திருந்தது.

ஜீவா, அஜ்மல், கார்த்திகா போன்றோர் நடித்திருந்த இப்படத்தை இயக்கியிருந்தார் கே.வி. ஆனந்த். நக்சல்கள் குறித்த தவறான பார்வை முன்வைத்த படம் என்ற விமர்சனம் எழுந்தாலும், இளைஞர்கள் அரசியலை ஊக்குவித்ததில் பலரின் பாராட்டுக்களைப் பெற்றது இத்திரைப்படம்.

இப்படி இளைஞர்கள் நேரடி அரசியலில் ஈடுபடுவதை வலியுறுத்திய படங்கள் மட்டுமல்லாமல், நடைமுறையில் அதிக சாத்தியமற்ற சில அரசியல் பங்கெடுப்புகள் குறித்தும் சில படங்கள் பேசியுள்ளன. இவை பெரும்பாலும் இளைஞர்கள் தவறான அரசியல் நிலை கண்டு வன்முறையில் ஈடுபடுவது போன்ற கதை கொண்டவைகளாக இருந்தன.
இன்றைய சமூக நிலையை அதன் யதார்த்தங்ளின் அருகில் பதிவு செய்தது தம்பி திரைப்படம். மேலும், இளைஞர்கள் நேரடி அரசியலில் பங்கெடுக்காவிட்டாலும் கூட, அரசு நிர்வாகப் பொறுப்புகளில் நிச்சயம் இளைஞர்களின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தியது இந்தப் படம்.
அரசியல் பற்றி உலகத் தலைவர்கள் உதிர்த்த உன்னத வார்த்தைகள்....
"போரில் ஒரு முறை தான் கொல்லப்படுவோம், ஆனால், அரசியலில் பல முறை "- ("In war you can only be killed once, but in politics manytimes")- WINSTON CHURCHILL
* " வயோதிகர்கள் போர் தொடுக்கிறார்கள். ஆனால், போரிட்டு மடிய வேண்டியது இளைஞர்களே"-(OLDER MEN DECLARE WAR. BUT IT IS YOUTH THAT MUST FIGHT AND DIE")- HERBERT HOOVER
* " நான் அரசியல்வாதியான சந்நியாசி அல்ல, சந்நியாசி ஆக முயற்சிக்கும் அரசியல்வாதி"- மகாத்மா காந்தி
மக்களிடமிருந்து அந்நியப்பட்டு கொண்டிருக்கும் அரசியலை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு, இத்தகைய கருத்துக்களை கொண்ட சில தமிழ் சினிமாக்கள் மேலும் பல வரவேண்டும் என்பதே சமூக அக்கறையுடன் சினிமாவை நோக்கும் ஆர்வலர்களுடைய கருத்தாக இருக்கிறது.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING