Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

திமுக வெளியேறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது :- சோனியா காந்தி


                       ந்திய மத்திய அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூட்டணியின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று திமுகவின் விலகல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
         இது குறித்து இப்போதைக்கு கருத்து எதுவும் சொல்ல இயலாது என்று மட்டும் கூறியுள்ளார்.முன்னதாக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
      அதில் பேசிய சோனியா காந்தி, இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக இந்தியா உறுதியான நிலைப்பாட்டுடன் எதிர்க்கும்.
             இலங்கையில் நடந்த போரின் போது தமிழ் இன படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த இந்தியா ஆதரிக்கும் என தெரிவித்திருந்தார்.

###############################


Sonia refuses to comment on key ally DMK's pullout

Congress President Sonia Gandhi today demanded an "independent and credible" inquiry into the violation of human rights in Sri Lanka even as she refused to comment on key UPA ally DMK withdrawing support to the government at the Centre.


Voicing her pain and anguish over the "denial of legitimate political rights" to Sri Lankan Tamils, Gandhi dwelt at length on the issue at the Congress Parliamentary Party (CPP) meeting here.

Gandhi's remarks on the Sri Lankan Tamils issue came ahead of DMK's announcement withdrawing support to UPA.

"I have nothing to say now", Gandhi said when later asked about the pull out by DMK.

"The plight of Tamils in Sri Lanka is close to our hearts. Our support for equal rights and equal protection of the laws to them has been unwavering since the days of Indiraji and Rajivji.

"We are most pained at the manner in which their legitimate political rights continue to be denied to them. We are anguished by reports of unspeakable atrocities on innocent civilians and children, especially during the last days of the conflict in 2009," she said in her four-page speech.

************************************************


ஜெனிவாவில் அமெரிக்க இறுதி வரைவு தீர்மானம் வெளியீடு! சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கம்!


               இலங்கைக்கு எதிராக திருத்தப்பட்ட இறுதி வரைவு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் . அமெரிக்கா வெளியிட்டது. இத்தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இத்தீர்மானம் தற்போது நான்காவது முறையாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 


         இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனிவாவில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது.

         முன்னதாக இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை 18 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த மாதம் சமர்ப்பித்தார்.
        அதில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதாக அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து பல்வேறு திருத்தங்களுடன் இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதியில் இராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும்.
போரின் போது தமிழர்கள் பலர் காணாமல் போனது கவலை அளிக்கிறது.
போர்க்குற்றம் ‌தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.
எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றும் திட்டம் இலங்கைக்கு இல்லை.
இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி ,நல்லிணக்கம் முழுமையாக செயல்படவில்லை.
மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அந்த வரைவுத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது.
         இதற்கிடையே இந்தியாவில் தமிழர்கள் எதிர்பார்க்கும் கோரிக்கையான சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி. எனப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த போதிலும், எல்.எல்.ஆர்.சி. திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
         நாளை புதன்கிழமை மதியம் அல்லது வியாழக்கிழமை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..
         இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவுத் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்துள்ளது. உப்பு சப்பில்லாத இந்த தீர்மானத்தினால் இலங்கை தமிழர்கள் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை என்ற கருத்து நிலவி வருகிறது.

***************************************************************************************

ஐ.மு.,கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது
                   ஐ.மு., கூட்டணியில் இருந்து திமுக உடனடியாக வெளியேறுவதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்தார். இன்று மாலை அல்லது நாளைக்குள் திமுக அமைச்சர்கள் பிரதமரைச் சந்தித்து ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்: ஈழத் தமிழர் போராட்டத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.ஈழத்தமிழர் உரிமை, தமிழர்கள் வாழ்வாதரத்திற்காக, 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக குரல் கொடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
ஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை மத்திய அரசு நீர்த்துப் போக செய்து விட்டது என கருணாநிதி குற்றஞ்சாட்டினார். திமுக., வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசிலீக்கவில்லை என்றும் அதனைத் தொடர்ந்தே கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கருணாநிதி விளக்கமளித்தார்.
மறு பரிசீலனை: மேலும், 21ம் தேதிக்குள்ள மத்திய அரசு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தனது முடிவு மறு பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தா.பாண்டியன் பாராட்டு: மத்தியில் ஆளும் ஐ.மு.,கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாநிதி அறிவித்துள்ள நிலையில், அவரது முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து விலகியதன் மூலம் மத்திய அரசுக்கு திமுக நிர்பந்தம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
ஆபத்து இல்லை: ஐ.மு.,கூட்டணியில் இருந்து விலகி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டுள்ளதால், மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி அளித்த கோரிக்கைகள் குறித்து பிரதமர் மற்றும் சோனியாவிடம் விமக்கமளித்துள்ளதாகவும், தொடர்ந்து இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அந்த வேளையில் தான் திமுக இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING