கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த அமராவதி அணையின் நீர்மட்டம் 8 அடிக்கும் கீழாக குறைந்துள்ளது. அமராவதி அணையின் மூலமாக திருப்பூர், ஈரோடு, கரூர் வரையிலான 3 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இதோடு அணையின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரும் இந்த அணை மூலமாகவே வழங்கப்படுகிறது.
இந்நிலையில் போதிய மழையின்மையால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து பல இடங்களில் வறண்டு போய் காணப்படுகிறது. கோடை காலத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இப்பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.