Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

புவி தினத்தின் அவசியம்       ந்த உலகம் எப்படி உருவானது என்பதற்கு பல்வேறு காரணங்களை விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். அதே போல் புவி தினம் உருவானதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இன்றைய தினம் கொண்டாடப்படும் இந்த புவி தினம், 1970-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
  தொடக்கத்தில் ஒரு சில இடங்களில் நடத்தப்பட்ட புவி தினக் கடைப்பிடிப்பு, இன்று உலகெங்கும் 140-க்கும் அதிகமான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. புவி தினம் உருவான வரலாறையும், அதன் வளர்ச்சியையும் பற்றிய விவரம்:-
   புவியின் பாதுகாப்பையும், அதன் வளத்தையும் மேம்படுத்தும் நோக்கில் புவி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோவில் கடந்த 1969-ம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், ஜான் மகொநெல் என்பவர் பூமிக்கென்று ஒரு தினம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.
   குறிப்பாக, பூமியின் வடக்கு கோளத்தில் வசந்த காலம் தொடங்கும் மார்ச் 21-ம் தேதியை, புவி தினமாக கொண்டாடலாம் என்றும் யோசனை கூறினார்.இதனை அப்போதைய ஐ.நா பொது செயலாளரும் ஏற்றுக் கொண்டார். ஆனால், தற்போது கொண்டாடப்படும் புவி தினத்தின் காரணகர்த்தா ஆகக் கருதப்படுபவர் டெனிஸ் ஹேய்ஸ்.
 
 1970-ம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கூடிய மாணவர் குழு ஒன்று டெனிஸ் ஹேய்ஸ்ன் புவி தினக் கொண்டாட்டம் தொடர்பான திட்டங்களை கேட்டறிந்தது. இதையடுத்து நியூயார்க் நகரில் முதலாவது புவி தினம் கொண்டாட திட்டமிட்டது.சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்ற இந்த புவி தினத்தை பல முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்பின. அதே காலகட்டத்தில் பிலடெல்பியா நகரின் ஃபர்மவுண்ட் பூங்காவில் புவி தினம் கொண்டாடப்பட்டது.
  அதன் பின்னர் வெவ்வேறு கால கட்டங்களில் புவி தினம் கொண்டாடப்பட்ட நிலையில், 20-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. சுமார் 141 நாடுகளில், 2 கோடி மக்களை ஒன்று திரட்டி நடத்தப்பட்ட 1990-ம் ஆண்டு புவி தினக் கொண்டாட்டம், ரியோ டி ஜெனிரோவில் 1992-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பூமி மாநாட்டிற்கு பெரும் தூண்டுகோலாக இருந்தது.
   இதேபோல் புத்தாயிரமாவது ஆண்டில் நடந்த புவி தினம் கொண்டாட்டத்தில் 5 ஆயிரம் சுற்றுச்சூழல் அமைப்புகள் ஒருங்கிணைந்து, 183 நாடுகளில் பூமியை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தின. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்பட்ட புவி தினத்தில் உலகெங்கும் ஒரு கோடி பேர் பங்கேற்றனர்.
   இதன் எதிரொலியாக 2009-ம் ஆண்டு, புவி தினத்தை, சர்வதேச பூமி அன்னை தினமாக கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தது. பூமியும் அதன் சுற்றுச்சூழல் அமைவு ஆகியவையே மனிதர்களின் வீடுகள். எனவே, பூமியை இயற்கையுடன் ஒருங்கிணைப்பது அவசியம் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
   தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள், வாகனப் புகை, ரசாயன உரங்கள், அணு ஆயுத சோதனை என பல்வேறு வழிகளில் பூமித் தாயின் பூவுடலை, கொஞ்சம் கொஞ்சமாக சேதப்படுத்திய நாம், இனியேனும், அந்த பூமித் தாயை பாதுகாக்க வேண்டும் என்ற சூளூரையை, இந்தப் புவி தினத்தில் ஏற்போம்.
புவி தினத்தின் அவசியம்:-
   சூரியக் குடும்பத்தில் நாம் வாழும் பூமிதான் மிகவும் அற்புதமானது. உயிரினங்கள் வாழும் ஒரே கோளும் நம் பூமிதான். மனிதனையும் சேர்த்து தற்போது 10 கோடி வகை உயிரினங்கள் புவியில் வாழ்கின்றன. பூமி உருவானதில் இருந்து இன்று வரை ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இயற்கை நிகழ்வுகள் மற்றும் பேரழிவுகளால், பூமியின் தோற்றம் மாற்றம் கண்டுள்ளது.
   இந்த மாற்றங்களால் நன்மைகளும், தீமைகளும் மாறி மாறி ஏற்பட்டுள்ளன. மனிதன் உருவான பின்னர் தான் புவியின் அழிவு ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஏராளமான ஆதாரங்களும் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
   முக்கியமாக நாம் பயன்படுத்தும் ஏராளமான செயற்கைப் பொருட்கள், நமது செயல்பாடுகளும் பூமியின் முகத்தோற்றத்தை அடியோடு மாற்றி வருகின்றன. அவற்றில் முக்கியமானவை, நமது பொருளாதாரத் தேவைகளுக்காக காடுகளை அழிப்பதும், நமது சுய லாபத்திற்காக பூமியை அளவுக்கு அதிகமாக மாசுபடுத்துவதும்தான்.
   உலகின் நுரையீரல்களாக கருதப்படும் தாவரங்களை, தனது தேவைக்காக மனிதன் அழித்ததன் எதிரொலியாகவே புவி வெப்பமடைகிறது எனவும் ஆய்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
   புவிக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவை தடுக்க பூமியை காக்க வேண்டும்..அதன் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது தான் புவி தினம்.
   மனிதர்கள் ஏற்படுத்திய பாதிப்புகளால் புவி வெப்பமடைந்து, துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்கள் வேகமாக உருகி வருகின்றன. இதன் எதிரொலியாக கடல் மட்டம் உயர்கிறது, நிலப் பகுதிகளும் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளது.
   இந்தச் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு மனிதர்களே முழுமுதற் காரணம் என்பதால், புவியை பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் நமக்கே இருக்கிறது. அதற்காக உருவாக்கப்பட்ட இந்த புவி தினத்தில், பூமியைக் காப்பாற்ற நம்மால் ஆன சிறிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
   உதாரணமாக, வீடுகளில் வெப்பத்தை உமிழும் குண்டு பல்புகளுக்கு பதிலாக டியூப் லைட் அல்லது மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் சிஎப்எல் பல்புகளைப் பயன்படுத்தலாம்.மின்சாரம் தயாரிப்பதற்கு அதிகளவில் தற்போது நிலக்கரியும், அணு உலையும் பயன்படுத்தப்படுகின்றன.
   இதில் நிலக்கரி இயற்கை வளமாகும். அதை அளவுக்கு அதிகமாக சில நாடுகள் சுரண்டுவதாலும், புவி வெப்பமடைகிறது. எனவே, தேவை இல்லாத போது மின் உபகரணங்களை அணைத்து வைக்க வேண்டியது அவசியம்.
   அதே போல் சுத்தமான பிராணவாயு கிடைக்க வீடுகளில் மரம் வளர்ப்பது அவசியம் என்பதையும் நாம் உணர வேண்டும். இயற்கையின் கொடையில் முக்கியமானதாக கருதப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மரங்களை அழித்து காகிதங்கள் உருவாக்கப்படுவதால், அவற்றைப் பயன்படுத்துவதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
   இறுதியாக, புவி வெப்பத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஓசோன் படலத்தில் விழும் ஓட்டைகள் தான். இந்தப் படலம் சேதமடைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை திகழ்கிறது. எனவே, தனி வாகனங்கள் பயன்படுத்துவதைக் குறைத்து ரயில், பேருந்து போன்ற பொது வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் புவி வெப்பத்தை நாமும் தடுக்க முடியும்.
   நாம் பூமிக்கு ஏற்படுத்திய பாதிப்புகளை போக்க என்ன செய்யலாம்? தனி மனிதராக நாம் எப்படி உதவலாம்? போன்றவற்றை பற்றிய விவரங்கள்:-
* புதை படிவ எரிபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க சக்திகளான காற்றாலை, சூரிய ஓளி திட்டங்களை செயல்படுத்தலாம். இதனால் கரியமில வாயுவினால் ஏற்படும் பாதிப்பு வெகுவாக குறைகிறது. வீட்டளவிலும் இதுபோன்ற திட்டங்களை தேவைக்கேற்ப நிறுவலாம்.மேலும் குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும் சிஎப்எல் பல்புகளை பயன்படுத்தலாம்.
* குப்பைகளை குறைப்பதால் மீதேன் உள்ளிட்ட ஆபத்தான வாயுக்களின் வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 10 சதவீதம் வரை வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும். நம் வாழ்வியல் முறையில் மாற்றங்கள் கொண்டு வந்து, கூடிய அளவுக்கு மறுசுழற்சி செய்யலாம். இதனால் தேவைகள் குறைவதோடு அவற்றை தயாரிப்பதற்கான எரிபொருளும், சக்தியும் பாதுகாக்கப்படுகின்றன.
* ஒவ்வொரு முறை தண்ணீரை சுத்திகரிக்கும் போதும், விநியோகிக்கும் போதும் அதிகளவில் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது. சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதோடு, சேமிக்கும் வழிகளையும் யோசிக்கலாம்..மழை நீரை சேமிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டினால் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும்.
* வீடுகளை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள, சுவர்களுக்கு பாதுகாப்பு பூச்சு, ஜன்னல்களுக்கு பருவநிலை காக்கும் கண்ணாடி என பல நவீன அம்சங்களை சேர்த்துக்கொள்ளலாம்.இதன் காரணமாக அதிக வெப்பத்தை வெளியேற்றும் குளிர்சாதன கருவிகளை எல்லா நேரங்களிலும் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.
* அருகாமையிலுள்ள இடங்களுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ செல்லலாம். தேவைப்படும் நேரங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த எண்ணலாம். வாகனத்தை இயக்குவதாக இருந்தாலும், அது நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். வாகனங்களாலும் அதிகளவில் எரிபொருள் வீணடிக்கப்படலாம்.
* தேவைப்படும் நேரங்களை தவிர பிற நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
* பல வகை மாசினால் மூச்சு திணறி கொண்டிருக்கும் பூமிக்கு பிராணவாயுவை கூட்டவும், ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து நம்மை பெருமளவு காப்பாற்றவும் தேவைப்படுவது மரங்கள்.நிழல் தரும் மரங்கள் வளர்ந்தால், பூமி சற்றே இளைப்பாறும்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING