Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

உயிரை பொருட்படுத்தாமல் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்வது ஏன்?


     தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள், வெளிநாடுகளில் குடியேறுவதற்காக இங்கிருந்து தப்பித்து போவதும், அவர்களை கடலோர காவல் படையினர் பிடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
   25 ஆண்டுகளுக்கு முன்பு உயிர் பிழைத்தால் போதும் என இலங்கையில் இருந்து தப்பித்து வந்த இவர்கள், தற்போது உயிரை பொருட்படுத்தாமல் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்வது ஏன்? என கேள்விகள் எழுகின்றன.
  அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக 120 இலங்கை அகதிகள் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டனர். இவர்கள் சென்ற படகு இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் நின்றதால், கடலோர காவல் படையினர் மூலம் மீட்கப்பட்டனர்.
   இலங்கை தமிழ் அகதிகள் அடிக்கடி இவ்வாறு செல்வதும், பிடிபடுவதும் தொடர்கதையாகி வரும் வேளையில், ஏன் இவர்கள் இவ்வாறு செல்கிறார்கள் என்று கேள்வியும் எழுந்துள்ளது. இந்தியாவுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும், தங்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என்று இதற்கு ஒரு காரணமாக கூறுகின்றனர் இலங்கை அகதிகள்.
  இன்னும் பல இலங்கை அகதிகள், தாங்கள் சிறை வாழ்க்கை வாழ்வதாகவும், தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர். ஒரு வாகனம் கூட வாங்க அனுமதி கிடைப்பதில்லை என்றும் கூறும் இலங்கை அகதிகள், கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்குச் சென்றால், தங்கள் குடும்பத்தை வளமாக வாழ வைக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.
   உயிருக்கு உலை வைக்கும் இதுபோன்ற ஆபத்தான கடல் பயணத்தை  மேற்கொள்ளும் அகதிகளின் குறைகளை கண்டறிந்து அவற்றை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பதே இலங்கை தமிழர்களின் பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆஸ்திரேலியா செல்லும் குடும்பங்கள்
இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்கு அடைக்கலமாக செல்ல விரும்பும் இலங்கை அகதிகளின் முதல் விருப்பமாக இருப்பது கிறிஸ்துமஸ் தீவு.
ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான இந்தத் தீவை, அகதிகள் தேர்வு செய்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் இருந்து கடல் வழியாக கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்வதற்கு, அகதிகள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை....
எப்படி செல்கின்றனர்..?
தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதைத் தொழிலாகவே செய்துவரும் இடைத்தரகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் ரூ.20 லட்சம் முதல் 30 லட்சத்துக்கு ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொள்கின்றனர். அதை நடுக்கடலில் நிறுத்திவிட்டு, கரையோரங்களில் இருந்து, மீன்பிடி படகு மூலம் அகதிகளை தங்களது படகுக்கு அழைத்து வருகின்றனர்.
10 முதல் 20 பேர் வரை மட்டுமே செல்லக்கூடிய படகில், ஏறத்தாழ நூறு பேர் வரை ஏற்றுகின்றனர். ஒவ்வொருரிடமிருந்தும் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.
காரைக்கால், ஏனாம், நாகை, கொச்சி ஆகிய இடங்கள்தான் அகதிகளை ஏற்றுவதற்கான மையங்களாக இருக்கின்றன. இந்தியப் பெருங்கடல், இந்தோனேஷிய கடல் வழியாகச் செல்லும் அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவுக்கு அருகேயுள்ள கிறிஸ்துமஸ் தீவுதான் இலக்கு.
அங்கு சென்றுவிட்டால், ஆஸ்திரேலியாவில் அகதி என்கிற அந்தஸ்து கிடைத்துவிடும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், இந்தக் கடல்பாதை அவ்வளவு எளிதானதல்ல. 3 ஆயிரம் கி.மீ. தொலைவு கொண்ட இந்தப் பாதை பனிப்பாறைகள் நிறைந்தது. கடுங்குளிரைப் பொருட்படுத்தாமல் 15 நாள்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும். உணவுப் பொருளோ, டீசலோ தீர்ந்து போனால், நடக்கடலில் தத்தளிக்க நேரிடும்.
நோய்வாய்ப்படுவோருக்கு சிகிச்சையளிக்கவும் படகில் வசதி இருக்காது. அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றுவதால், பளு தாங்காமல் படகு உடைந்துவிடும் அபாயமும் இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகே, 448 பேர் படகு மூழ்கி பலியாகியிருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, புகலிடம் தேடியோ, அகதியாகவோ யார் வந்தாலும், அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பது அந்நாட்டின் விதிமுறையாக உள்ளது.
விசா இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களுக்கு முதலில் அடைக்கலம் கொடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் வகுத்த விதிகளின்படி அகதி என்ற அடிப்படையில் வருபவரை, தங்கள் நாட்டிலிருந்து உடனடியாக ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பாது என்பதால், இலங்கை அகதிகள், இந்தோனேஷியாவிற்கு அருகில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவை சென்றடைவதை குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர்.
மனித உரிமை மீறல், சித்ரவதை போன்ற கொடுமைகளில் இருந்து தப்பி வந்தவர்களுக்கு உரிய முறையில் ஆஸ்திரேலிய அரசு அடைக்கலம் கொடுக்கிறது.
இந்த அடிப்படையிலேயே இலங்கை அகதிகள் கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், 2009ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, இலங்கை வாழ் மக்களுக்கு அகதிகள் அந்தஸ்து கொடுப்பதை ஆஸ்திரேலியா குறைத்துக்கொண்டுள்ளது.

தஞ்சமடைந்த இடத்திலும் தவிப்பு
சொந்த மண்ணில் இருந்து துரத்தப்பட்டு, தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்த தங்களுக்கு, இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த அடிப்படை உரிமைகளும் கிடைக்கவில்லை என வேதனைப் படுகின்றனர் இலங்கை அகதிகள். அகதிகள் என்ற பெயரில் கொத்தடிமைகளைப் போல் தாங்கள் நடத்தப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இழப்பதற்கு எதுவுமில்லை ....
எனினும் தஞ்சமடைவதற்கு தமிழகம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் வந்து சேர்ந்தவர்கள் தான் இலங்கைத் தமிழர்கள்.
ராமேஸ்வரத்தை வந்து அடையும் போதே, அகதிகள் என்ற அடையாளத்துடன் மண்டபம் முகாமில் தங்கவைக்கப் பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். தங்களின் வாழ்க்கை, நவீன உலகின் சகிக்க முடியாத கொடூரம் என்கின்றனர் இலங்கை அகதிகள்.
பத்துக்குப் பத்து நீள, அகலத்தில், தகரங்களால் ஆன தடுப்புகளுக்குள் தற்காலிக முகாம்கள் என்ற பெயரில் நகரத் தொடங்கிய அவர்களது வாழ்க்கை, தற்போதும் அப்படியே தொடர்கிறது. போதிய கழிப்பிட வசதிகள் கூட இல்லாத முகாம்களில் கொத்தடிமைகளைப் போலத் தங்கள் வாழ்வு கழிவதாக வேதனைப் படுகின்றனர் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்கள்.
அன்றாட வாழ்வுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்பதை விட, மனிதர்களாக வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் கிடைக்கவில்லை என்பதே தங்களை அழுத்தும் சோகம் எனவும் அவர்கள் கண்கலங்குகின்றனர். அகதிகள் என்பதைவிட ஈழத்தமிழர்கள் என்று அழைக்கப்படுவதையே தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
வசதிகளை விட உரிமைகளே தங்களுக்கு வேண்டும் என்ற இலங்கைத் தமிழர்களின் குரல் மத்திய, மாநில அரசுகளின் செவிகளில் விழவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.
தமிழகத்தில் இலங்கை அகதிகளின் நிலை...
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள் பற்றியும், அவர்களின் எண்ணிக்கை பற்றியும் பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. எனினும், தமிழக அரசு அறிக்கையின் படி, தமிழகத்தில் மொத்தம் 115 அகதிகள் முகாம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் உள்ள 2 முகாம்களும், சிறப்பு முகாம்களாக கருதப்படுகின்றன. சிறைச்சாலையை முகாமாக மாற்றியதால், அவை சிறப்பு முகாம்கள் என்றழைக்கப்படுகின்றன.
இதுதவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள 113 முகாம்களும், சாதாரண அகதிகள் முகாம்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்த முகாம்களில் உள்ள அகதிகளின் எண்ணிக்கை 73 ஆயிரத்து, 251 என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம்களைத் தவிர வெளியில் இருக்கும் அகதிகளின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 242 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாம், நெல்லை மாவட்டம் போகநல்லூரில் உள்ள அகதிகள் முகாம் மட்டுமின்றி, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்தியாவுக்கு வந்து பல ஆண்டுகளான பின்னரும் கூட, இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை.
முகாம்களுக்கு வெளியே சுமார் 32 ஆயிரம் இலங்கை அகதிகள் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் இருக்கும் என இலங்கைத் தமிழ் அகதிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

##############################################################

உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை விசாரணை இன்று தொடக்கம்


     முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கின் இறுதிகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்குகிறது. நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். தத்து, சி.கே. பிரசாத், மதன் பி. லோகுர், எம்.ஒய். இக்பால் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கினை விசாரிக்கவுள்ளது.
  இந்த விசாரணையின் போது, முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் உள்ளது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் குழு அளித்த 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை மீது தமிழகம், கேரளா அரசு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன் வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  119 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136-ல் இருந்து, 142 அடிகளாக உயர்த்த வேண்டும் என்று 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத கேரள அரசு, அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING