![]() |
சீனா மற்றும் கொரியா நாடுகளில் இருந்து மலிவு விலை செல்ஃபோன்கள் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.
அதன்படி, செல்ஃபோன் வெளியிடும் கதிர்வீச்சு அளவுக்கான கட்டுப்பாட்டுக்குள் வராத செல்ஃபோன்களை இறக்குமதி செய்வது தடுக்கப்படும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்ஃபோனில் ஒரு கிராம் எடையுள்ள மனித திசுவில் 1.6 வாட் அளவுக்குள் கதிர்வீச்சு அளவு இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த செப்டம்பரில் வரம்பு நிர்ணயித்தது. இது தொடர்பாக இந்திய செல்ஃபோன் நிறுவனங்கள் சங்கம், தொலைத்தொடர்பு கருவிகள் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றுடன் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.
செல்ஃபோனில் கதிர்வீச்சு அளவுக்கான கட்டுப்பாடு விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜ.எம்.ஈஐ எண் மற்றும் கதிர்வீச்சு கட்டுப்பாடு ஆகியவற்றை நிறைவு செய்யாத செல்ஃபோன்கள் இறக்குமதியை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தொலைத் தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.