Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

தமிழகம் முழுவதுமே திடக்கழிவு மேலாண்மை என்பது பெரும் சவால் நிறைந்ததாக உள்ளது.


   திருச்சி அரியமங்கலம் அருகிலுள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று மாலை 3 மணி அளவில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் புகை மூட்டத்தால் திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

ஆனால் ..,
தமிழகம் முழுவதுமே திடக்கழிவு மேலாண்மை என்பது பெரும் சவால்
நிறைந்த பணியாகவே உள்ளது. சிறிய கிராமப் பஞ்சாயத்துகள் முதல் சென்னை போண்ற பெருநகரங்கள் வரை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் சந்தித்து வரும் தொடர் பிரச்சனை திடக்கழிவு மேலாண்மை. புதிய திட்டங்கள், வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள் என பல்வேறு வழிகளில் கோடிக்கணக்கான ரூபாய் செலவளித்தும் தீரவில்லை இந்தக் குப்பைப் பிரச்சனை. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாவதோடு சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

மலை போல் குவியும் குப்பை சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டிற்கும் நிலத்தடி நீர் மாசடைவதற்கும் முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. இப்பிரச்சனைக்கு மாற்றாக என்னனென்ன தீர்வுகள் உள்ளன என்பது தொடர்பான விவாதம் சென்னையில் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
திடக்கழிவு மேலாண்மையில் தமிழகம் கையாண்டுவரும் வழிமுறைகள் தவறானவை என்றும், இந்த முறைகளினால் குப்பை மலைகளைத்தான் உருவாக்க முடியுமே தவிர கழிவுகளை அழிக்க முடியாது என இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள்.
ஆரம்ப காலங்களில் குப்பை கிடங்குகளில் இருந்து மக்கிய குப்பைகளை விவசாயிகள் நிலங்களுக்கு உரமாக எடுத்துச் சென்ற பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது மக்கள் பிளாஸ்டிக், கண்ணாடி போன்ற பொருட்களை பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. மேலும் குப்பைகளும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து முறையாக சேகரிக்கப்படுவதில்லை இதனால் குப்பை கிடங்குகள் நோய் பரப்பும் கூடாரமாகவும், மண், காற்று, நீர் என அனைத்து ஆதாரங்களையும் சேதப்படுத்துவதாகவே இருக்கின்றன.
குப்பை மேலாண்மையில் சென்னை நிலை என்ன?
சென்னையை பொறுத்த வரை பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கூளங்கள் சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டிற்கும் நிலத்தடி நீர் மாசடைவதற்கும் முக்கியக் காரணமாகத் திகழ்வதாகவும், இதனைச் சரிசெய்ய மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்துதாகவும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான தேவசகாயம் கூறினார். கழிவுகளை கழிவுகளாக பார்க்காமல் வளங்களாக பார்த்தால்தான் திடக்கழிவு மேலாண்மை சாத்தியப்படும் என திடக்கழிவு மேலாண்மையில் மாற்று யோசனையை முன்வைத்த மற்றொரு அதிகாரி.
அன்றே சொன்னது புதிய தலைமுறை:
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக்கிடங்கில் ஏற்படும் தீ விபத்துகளால், அந்த பகுதியே அடிக்கடி புகை மண்டலாமாகி விடுகிறது. இதனால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் பொதுமக்கள், அந்த பகுதியில் குப்பைக் கொட்டுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு (2012)ஜூன் மாதம் 7ம் தேதி பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. சமூக விரோதிகளே இந்த தீ விபத்திற்கு காரணம் என்று கூறிய சென்னை மாநகராட்சியால் பல நாட்கள் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.தீ விபத்து காரணமாக வாகனங்களில் செல்வோருக்கு ஏற்பட்ட பாதிப்புகளால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த புதிய தலைமுறை அங்கிருந்து நேரடியாக மக்கள் படும் துயரத்தினை எடுத்துக் காட்டியது. பள்ளிக்கரணை குப்பை கிடங்கு மற்றும் பொது மக்கள் படும்பாடு குறித்த செய்தியை வெளியுலகிற்கு உரக்கச் சொன்னது புதிய தலைமுறை.
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கிடங்கு 15 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. நாள் ஒன்றுக்கு இந்த குப்பைக் கிடங்கில் 100 முதல் 110 மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன. ஜலதாம்பேட்டை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் சேரும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கரணை பகுதி மக்கள் குப்பைக் கிடங்கை மூட வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், குப்பைகள் அமைந்திருக்கும் பகுதியில் குடியிருப்புகளை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் எப்படி அனுமதி அளித்தது என்பது தான் இப்பகுதி மக்களின் கேள்வி.
புதிய தலைமுறை ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக பள்ளிக்கரணை தீயை அணைக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் இன்னும் 5 ஆண்டுகளுக்கு குப்பைகள் கொட்டுவதற்கு இடம் இருப்பதாக கூறியுள்ள சென்னை மாநகராட்சி, இதனை நவீன குப்பை அகற்றும் வளாகமாக மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் கூறியது.
கொடுங்ககையூர் குப்பை கிடங்கு:
பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூரில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் குப்பைக் கிடங்கில், மாநகராட்சிக்கு உட்பட்ட 8 மண்டலங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த நிலையில், கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு சில நாட்கள் தொடர்ந்து அணையாமல் தீ எரிந்தது. இதனால் அந்தப் பகுதியில் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. புகையால் அப்பகுதி மக்களும், அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். நடவடிக்கை எடுக்க முன்வராத அதிகாரிகளைக் கண்டித்து, கொடுங்கையூர் மக்கள் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.
தஞ்சாவூர் குப்பைக் கிடங்கு:
தஞ்சையின் மையப் பகுதியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் புகை மூட்டத்திற்குள் சிக்கி சிரமப்பட்டனர். ஜெபமாலைபுரம், களிமேடு, சீராளுர் உள்ளிட்ட பகுதிகளில் புகை மூட்டம் அதிகம் காணப்பட்டது. 3 நாட்களுக்குப் பின்னர் தான் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. 28 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குப்பைக் கிடங்கில், தஞ்சை நகராட்சியின் 51 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.ஆண்டுக்கு 5 முறையாவது இதுபோன்ற தீ விபத்து ஏற்படுவதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், குப்பைக் கிடங்கை புறநகர்ப் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு நகராட்சி, மாநகராட்சிக் குப்பைக் கிடங்குகளில் தீ விபத்து நடப்பது மக்கள் நச்சுப் புகையால் அவதிப் படும் தொடர்கதையாகவே இருக்கிறது. இந்த பிரச்னைகளைக்கு முற்றுப்புள்ளி வைக்க திடக்கழிவு மேலாண்மையை சீர்படுத்துமா தமிழக அரசு?!

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING