2050ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 960 கோடியை எட்டும் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது. இதுதொடர்பாக உலக மக்கள் தொகை ஆய்வு என்ற தலைப்பில் ஐ.நா. சபை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மக்கள்தொகை 720 கோடியாக உள்ள நிலையில், அடுத்த 12 ஆண்டுகளில் 100 கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை அதிகரித்து 960 கோடியை எட்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளிலேயே மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும், இதில் பாதிக்கும் அதிகமான மக்கள் தொகை ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளில் தற்போதுள்ள மக்கள் தொகை வளர்ச்சி அப்படியே இருக்கும் என்றும், அதேசமயம் வளர்ச்சி குன்றிய 49 நாடுகளில் மக்கள் தொகை இரட்டிப்பாகும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும் 2028ம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை இந்தியா முந்தும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. ஆப்பிரிக்க உள்ளிட்ட உலக நாடுகளில் பிறப்பு விகிதங்கள் அதிகரித்து வருவதே மக்கள் தொகை அதிகரிப்புக்கு காரணம் என்றும் அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.