Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

ஒரு சமுதாய சிற்பியாக வெளிச்சமாய் இருக்கிறார் ஷெரீன்.


   இந்த உலகத்திற்கு உன் அறிவை உணர்த்தும் போது, இந்த உலகம் உன் தோற்றத்தை மறந்து விடும். இது நெல்சன் மண்டேலாவின் புத்தகத்தில் இருக்கும் வாக்கியம். இந்த வாக்கியம் ஷெரீனின் வாழ்க்கையை செதுக்கியதோடு அவரை இன்று ஒரு சமுதாய சிற்பியாக மாற்றியுள்ளது.
   சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஆதாரமாய் விளங்குவோரை அடையாளம் கண்டு, அவர்களது பணியை உலகறியச் செய்து மேலும் பலருக்கு வழிகாட்டுவதே "சமுதாய சிற்பிகள்" பகுதியின் நோக்கம்.
   தன் தோற்றம் இப்படித்தான், தன் நிறம் கறுப்பு தான் ஆனால் அது ஒரு தடையல்ல என உணர்ந்தார் ஷெரீன். பார்ப்பதற்கு மிகவும் எளிமையான ஷெரீன் பலரது வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுத்தித் தந்த ஒரு தெய்வமாகவே பார்க்கப்படுகிறார்.
   வாழ்க்கையின் ஓரத்தை பார்த்த சிலர் இவரது தொலைப்பேசி எண்ணை பார்த்ததால் இன்று எதிர்ப்பார்த்திராத உயரங்களை தொட்டு வருகின்றனர். சோகம், அவமானம், துயரம், போராட்டம் என எதற்கும் ஒரு முடிவு உண்டு, அது தற்கொலை அல்ல. தளராத எண்ணத்துடன் கூடிய உழைப்பு என்பதை இவர் பலருக்கு உணர்த்தி வருகிறார். காதல் தோல்வி, குறைந்த மதிப்பெண், ஆங்கிலம் தெரியவில்லை, பார்க்க அழகாக இல்லை என்று பல அர்ப்ப காரணங்களுக்கு சிலர் மீளமுடியா முடிவுகளை எடுக்கின்றனர். அப்படி இருட்டில் தங்களை தாங்களே தள்ளிக்கொண்டவர்களுக்கு வெளிச்சமாய் இருக்கிறார் ஷெரீன்.
    துவண்டு நிற்பவர்களை தூக்கி விடுவதற்கு கை கொடுக்க பலரை இந்த வெளிச்சம் குழுவினர் நேரடியாக சந்திக்கின்றனர். செய்யப்படும் உதவி இருதரப்பிற்கும் பயன் தரும் வகையில் வெளிப்படையாக நடந்து வருவதாக கூறுகின்றனர்.
   ஒரு கை ஓசை தராது என்பதற்கு விதிவிலக்காக இன்று இவரின் வழிகாட்டுதலினால் பல உயிர்கள் இந்த பூவுலகில் வாழ்வின் நிமிடங்களை ரசித்துக்கொண்டிருக்கின்றனர். மூட்டை தூக்கியவர் விஞ்ஞானியாகவும், கல்வி என்பது எட்டாக் கனியாக இருந்தவர்கள் இன்று முதலாளிகளாவும், வறுமையின் கோராமையை பார்த்தவர் நவநாகரீக உலகில் தொழில் முனைவோராகவும் இன்று உயர்ந்துள்ளனர்.
   தெளிந்த சிந்தனையும், நல்ல பக்குவமும் இருந்தால் மட்டுமே சோர்வின் பிடியிலிருக்கும் உயிர்களை மீட்க முடியும் என்று உளவியல் நிபுணர்கள் சொல்கின்றனர். அத்தனை எளிதாக யாரும் சென்றிராத தடத்தில் செல்வதோடு பலருக்கும் வழியை ஏற்படுத்தி தரும் இந்த வெளிச்சம் ஷெரீன், சமுதாயத்தின் உண்மையான சிற்பி.
   வாழ்க்கை விசாலமானது, வாழ்ந்தால் மட்டுமே அதன் ஆச்சர்யங்கள் புரியும் என்பதை பலதரப்பட்ட வயதினருக்கு அவர்கள் பாணியிலேயே எடுத்துரைத்து வருகிறார் ஷெரீன்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING