பிரதமர் மன்மோகன் சிங்கின் விமான பயணத்திற்காக மட்டும் கடந்த ஒன்பது ஆண்டுகளில், 642 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது இந்த தொகை செலவு செய்யப்பட்டுள்ளது.
பதவி ஏற்றதிலிருந்து 67 முறை வெளிநாடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பயணம் செய்துள்ளார். அவற்றில் 62 பயணங்களின் செலவுகளுக்கான கணக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம், 642 கோடியே 45 லட்சம் ரூபாய் பயணத்திற்காக செலவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டும், அமெரிக்கா மற்றும் பிரேசிலில் நடந்த அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற போது, 22.70 கோடி ரூபாய் விமானப் பயணத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மெக்சிகோ மற்றும் பிரேசிலில் நடந்த ஜி20 மற்றும் ரியோ மாநாடுகளில் கலந்து கொள்வதற்கான விமான செலவு 26.94 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.