சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் சில வரலாற்றுக் குறிப்புகளை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடிய குறுநில மன்னர்களில் முக்கியமானவர்
1797ல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்ட ஆலன் துரையை தோற்கடித்தார்
ஆங்கிலேயரின் வரிவசூலை எதிர்த்து ஆட்சியர் ஜாக்சன் துரையுடன் போராடினார்
1799ல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது
அக்டோபர் 16, 1799ல் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்
மருது சகோதரர்கள்
தமிழகத்தில், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர்கள்
தமிழகத்தில், 1785 -1801 வரை ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த குறுநில மன்னர்கள்
சிவகங்கையின் காளையார் கோயிலைக் களமாக கொண்டு இவர்கள் நடத்திய ஆட்சி மதநல்லிணக்கத்திற்கு சான்று
தஞ்சை முதல் நெல்லை வரை அரசியல் கூட்டணி அமைத்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினர்
திருப்புத்தூரில், 1801 அக்டோபர் 22ல் மருது சகோதரர்களை ஆங்கிலேயர் அரசு தூக்கிலிட்டது
வேலு நாச்சியார்
18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய சிவகங்கை ராணி
விடுதலைப் போரில் மன்னர் முத்து வடுக நாதர் வீரமரணம் அடைந்ததால், ஆட்சிப் பொறுப்பேற்றார்
ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தான், மருது பாண்டியர்களுடன் இணைந்து மதிநுட்பத்துடன் போராடியவர்
வெள்ளையர்களை விரட்டியடிக்க ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் ராணி என்ற பெருமைக்கு உரியவர்
வேலு நாச்சியாரை கௌரவித்து 2008, டிசம்பர் 31ல் மத்திய அரசு தபால் தலை வெளியிட்டது
வேலூர் கலகம்
வேலூர் கோட்டையில் 1806இல் ஏற்பட்ட கிளர்ச்சியே, சுதந்திர போராட்டத்திற்கான முதல் தீப்பொறியாக கருதப்படுகிறது
மெட்ராஸ் ரெஜிமென்ட் பிரிவில் இருந்த இந்தியர்களின் சமய அடையாளத்தை அழிக்க ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர்
ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக வேலூர் கோட்டையில் வீரர்கள் கிளர்ந்தெழுந்தனர்
மீரட் நகரில் 1857ல் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இந்திய வீரர்களின் புரட்சிக்கு வேலூர் கலகம் முன்மாதிரியாக கருதப்படுகிறது
வரலாற்றிலும், ஆவணங்களிலும் வெளிச்சத்திற்கு வராத வேலூர் கலகம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் புள்ளி
வாஞ்சிநாதன்
ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போராடிய தமிழர்களில் குறிப்பிடத்தக்கவர்
செங்கோட்டையில் 1886ல் பிறந்த வாஞ்சிநாதன், இளம் வயதிலேயே ஆங்கிலேயர் அடக்குமுறையை வெறுத்தார்
பாரதியார், சுப்ரமணிய சிவா, வ.உ.சிதம்பரனாரின் உரைகளால் சுதந்திர வேட்கை பெற்றவர்
வ.உ.சி மற்றும் சிவாவை கைது செய்த ஆஷ் துரையை, மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்றார்
ஆங்கிலேயர்களிடம் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க, தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட போராளி
வாஞ்சிநாதனை கவுரவிக்க, மணியாச்சி ரயில் நிலையத்திற்கு "வாஞ்சி மணியாச்சி" என பெயரிடப்பட்டது
கப்பலோட்டிய தமிழர்
மகாராஷ்டிரத்தில் திலகர், பஞ்சாபில் லால லஜபதி ராய் போன்று தமிழகத்தில் சுதந்திர கோரிக்கையை ஒலித்தார்.
சுதேசிய இயக்கத்தின் ஆணி வேராக திகழ்ந்த வ.உ.சி நெல்லையில் சுதந்திர வேட்கை பரவ காரணமாக இருந்தார்.
செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தாலும், தேச விடுதலைக்காக சொத்துக்களை செலவளித்த தன்னலமற்ற தியாகி
சுதந்திரத்திற்காக மட்டுமின்றி தூத்துக்குடி பஞ்சாலை தொழிலாளர்களின் போராட்டத்தையும் முன்னெடுத்தவர்.
வ.உ.சி கைது செய்யப்பட்ட போது நெல்லை மக்கள் செய்த கிளர்ச்சி ஆங்கிலேயர்களை அதிர வைத்தது.
வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது ஆங்கிலேயே நீதிமன்றம்
ஆங்கிலேய கப்பல் நிறுவனத்தின் சுரண்டலை தடுக்க சுதேசி கப்பல் கம்பெனி தொடங்கியதால் கப்பலோட்டிய தமிழர் ஆனார்
சுப்பிரமணிய சிவா
வீரமுரசு என்று புகழப்பட்ட சுப்பிரமணிய சிவா தமிழகத்தில் சுதேசி கனலை எரியச்செய்தவர்.
கிராமங்கள் தோறும் விடுதலை தாகம் ஏற்படச் செய்த சிறந்த மேடைப் பேச்சாளர், சிறந்த இதழாளர்
வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் சுப்பிரமணிய சிவா
அரசியலையும், ஆன்மிகத்தையும் இணைத்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகி
பாரத மாதாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற அவரது தாகம் மட்டும் இன்னும் தீரவில்லை
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்
மார்ச் 1930 - சபர்மதி ஆசிரமம் அருகே உள்ள தண்டி பகுதியில் உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார் காந்தி
தமிழகத்தில் ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் தொடங்கியது
சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்கள் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை பேரணியாக சென்றனர்
உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்த இந்தப் போராட்டத்தால், ஆங்கிலேயர் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது
ஜாலியன்வாலா பாக்
1919 ஏப்ரல் 13ல் ஆங்கிலேய ராணுவ அதிகாரி ஜெனரல் டயர் நடத்திய படுகொலைகளின் அடையாளம்
அமிர்தசரஸில் உள்ள இந்த சுற்றுச்சுவர்களால் சூழப்பட்ட மைதானத்தின் வாயிலில் இருந்து ராணுவத்தினர் 1,650 முறை சுட்டு தள்ளினர்.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்
379 பேர் பலியானதாக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கூறினாலும் உண்மையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் நீத்தனர்
இந்த கோரத் தாக்குதலின் சுவடுகளாக, ஜாலியன்வாலா பாக் பகுதி சுவர்களில் தோட்டாக்களின் தடயம் காணப்படுகிறது
ஆகஸ்ட் புரட்சி
1942ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கமே ஆகஸ்ட் புரட்சியாக வர்ணிக்கப்படுகிறது
ஆகஸ்ட் 8, 1942ல் நடைபெற்ற மும்பை காங்கிரஸ் மாநாட்டில் ஆகஸ்ட் புரட்சி முன்னெடுக்கப்பட்டது
மாநாட்டில் பேசிய காந்தி, "செய் அல்லது செத்து மடி" என்ற கோஷத்தை முன்மொழிந்தார்
1942 ஆகஸ்ட் 9ல், பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை ஆங்கிலேயர்கள் சிறைவைத்தனர்
சுதந்தரத்திற்காக நாடுமுழுவதும் அதிகஅளவில் மக்கள் கலந்து கொண்ட போராட்டமும் இதுவே.
முதல் சுதந்திரப் போர்
1857ல் ஆங்கிலேயே அரசுக்கு எதிராக ராணுவ வீரர்கள் தொடங்கிய கிளர்ச்சியே முதல் சுதந்திரப் போர்
என்ஃபீல்டு வகை துப்பாக்கித் தோட்டா உறைகளை வாயில் கடித்து அகற்ற எதிர்ப்பு
மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பில் தோட்டா உறைகள் செய்யப்பட்டதாக தகவல் பரவியது
மீரட் நகரில் தொடங்கிய கிளர்ச்சி, பல்வேறு மாநிலங்களிலும் பரவியது
தேசியக் கொடியை வடிவமைத்தவர்
ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி பிங்கலி வெங்கைய்யா
காந்தியின் ஆலோசனைப்படி தேசியக் கொடியை வடிவமைத்தார் பிங்கலி வெங்கைய்யா
30 கொடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் தேசிய கொடியை வடிவமைத்தார்
1921- காங்கிரஸ் மாநாட்டில் தேசியக் கொடியை அறிமுகப்படுத்தினார் பிங்கலி
1931- கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் தேசியக் கொடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது
மகாகவி பாரதியார்
உணர்ச்சி மிகுந்த பாடல்களாலும், மெய் சிலிர்க்கும் கவிதைகளாலும் மக்கள் மனத்தில் விடுதலை உணர்வை பொங்கச் செய்தவர்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த உலகத்தையே அழித்து விடுவோம் என்று முழங்கிய சிந்தனையாளர்.
சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று குழந்தைகளுக்குப் பாடம் புகட்டிய புரட்சியாளர்.
நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் கொண்டவர்களாக பெண்கள் இருக்க வேண்டும் என்று சொன்ன பெண்ணியவாதி.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ் மொழியின் பெருமையைப் பாடியவர்.
இந்தியா, சுதேசமித்திரன், உள்ளிட்ட பத்திரிகைகளில் தேசிய உணர்வையூட்டும் கட்டுரைகளை எழுதிய பத்திரிகையாளர்.