ஜப்பானின் புகுஷிமா அணு உலையிலிருந்து ஏற்பட்டுள்ள கதிர் வீச்சு கழிவால் பசிபிக் கடற்கரை பிராந்தியத்தில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து உன்னிப்பாக கவனத்து வருவதாக ஜப்பான் அணுஉலை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் சுனிஷி தாங்கா கூறியது: புகுஷிமாவில் உள்ள டாய்-சி அணு உலையிலிருந்து வெளியேறும் தண்ணீர் அதிகளவு கதிர்வீச்சு காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது குறித்து தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்புப் பணிகள் போதுமானதாக இல்லை. அணுஉலையை ஒட்டிய கடலில் நீர்மாசுடைந்துள்ளதை ஒருங்கிணைந்த முறையில் கண்காணித்து தடுக்கப்பட வேண்டும் என்றார்.
கதிர் வீச்சு கசிவு தொடர்வதை தடுத்து நிறுத்துவதற்கு அணு உலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததற்கு ஜப்பான் மீன்பிடி அமைப்புகள் கண்டித்துள்ளன. இதனால் ஜப்பானின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச்சில் சுனாமி பேரலைகள் தாக்கியதில் இந்த அணு உலை பாதிக்கப்பட்டது. அணு உலையை குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டோக்யோ மின் சக்தி நிறுவனம், உலையிலிருந்து அதிகளவு கசிவு ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது.இந்த கசிவு லெவல்-3 என சர்வதேச அணு சக்தி கதிரிவீச்சு அளவில் குறிப்பிட்டுள்ளது. இந்த அளவு மிக அபாயகரமானதாகும்.