தமிழகம் வெளிநாட்டு பறவைகளின் சொர்க்கபூமி என்று சொல்லலாம். 10-க்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயங்கள் தமிழகத்தில் உண்டு. ஆனால் அழகிய சரணாலயம் ஒன்று பலருக்கும் தெரியாமல் உள்ளது. அதைப்பற்றி ஒரு தொகுப்பு...
"விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்"
கண்களுக்கு விருந்தளிக்கும் பறவைகள் சரணாலயம் இருக்கும் இடம் திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தான்புரம். மக்கள் பறவைகளின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் 3 அடுக்கு மாடி ஒன்று கட்டப்பட்டுள்ளது. சரணாலயத்தின் உள்ளே இருக்கும் ஏரி முழுவதும் பல வகையான பறவைகள் கூடி இருப்பது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
கண்களுக்கு விருந்தலிக்கும் பறவைகள்
ரஷ்யா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் அக்டோபர மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக இங்கு வருவது வழக்கம். திருவாரூரில் இருக்கும் பலருக்கு இந்த சரணாலயத்தைப் பற்றி தெரியவில்லை என்பது வருத்தத்திற்குரிய தகவலாக இருக்கிறது.
வருகை தரும் வெளிநாட்டுப் பறவைகளின்
பறவைகளின் அழகை ரசிக்கும் மக்கள் ஒருபுறம் என்றால், அதனை வேட்டையாடும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. வேட்டையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சரணாலயத்தின் பல பகுதிகளிலும் காணமுடிகிறது. இந்த பிரச்னை குறித்து முத்துப்பேட்டை வனச்சரக அலுவலரிடம் கேட்டபோது, சரணாலயத்தைச் சுற்றி வேலி இல்லாததே வேட்டை நடைபெறக் காரணம் என்றும், விரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.