நாடு முழுவதும் போலீசாருக்கு தலையில் குட்டு வைக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட் எப்.ஐ.ஆர், தொடர்பா ஒரு சிறப்பு யோசனையை வழங்கியிருக்கிறது. அத்துடன் இந்த உத்தரவை பின்பற்றாத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் இன்று கூறியுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தல் தனது மகள் கடத்தப்பட்டது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தது தொடர்பாகவும் , இதில் சரியான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்ற விஷயத்தை வலியுறுத்தியும் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது;
ஒரு குற்றப்புகாரில் வெளிப்படையான , தெரியும் அளவிற்கு குற்றம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தாலே உடனே எப்.ஐ.ஆர்.,( முதல் தகவல் அறிக்கை ) பதிவு செய்ய வேண்டும். இது மிக அவசியமானதும் கூட. இதனை தவிர்க்க கூடாது. மேலும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும் முன்பாக போலீசார் விசாரணை என்ற கட்டம் தேவையற்றது. அது போல் எப்.ஐ.ஆர்., போடாமல் நடவடிக்கை எடுப்பதும் அவசியமில்லை.
போலீசாரின் முதல்கட்ட ஆய்வும் 7 நாட்களுக்குள் இருக்க வேண்டும். தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் அடிப்படையில் நடவடிக்கை என்பதை விட ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கலாம். எப்.ஐ.ஆர்., போட மறுக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.
இது ஏற்று கொள்ளக்கூடியது :
திருமண பந்த பிரச்னை, ஊழல், நிதி முறைகேடு, நம்பிக்கை தொடர்பான விஷயங்களில் முதல்கட்ட விசாரணை மிக முக்கியத்துவமாக இருக்க வேண்டும். இது ஏற்று கொள்ளக்கூடியது. எப்.ஐ.ஆர், பதிவேட்டில் காட்டப்பட்டு அதற்கான நகல்கள் புகாரர்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். புகாரில் ஆதாரங்கள் இருந்தால் ஒழிய கைது நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
கட்டப்பஞ்சாயத்து இனி முடியாது : தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட ( அரசியல் சாசன பெஞ்ச் ) இந்த சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு முக்கியத்தும் வாய்ந்ததாகும். குறிப்பாக பல போலீஸ் ஸ்டேஷன்களில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுப்பது, எப்.ஐ.ஆர்., போட்டும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது, காவல் நிலையங்களிலேய பேசி தீர்க்கும் கட்டப்பஞ்சாயத்து இனி நடத்த முடியாது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊட்டியின் பயங்கர முகம் வளைந்து நெளிந்து
செல்லும் சாக்கடை ஓடை....!
பழமையான மரங்கள் வெட்டி சாய்ப்பு: வேளச்சேரி
பகுதி வாசிகள் கொதிப்பு.......!
வேளச்சேரியில், பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில், அடர்த்தியான மரங்கள் அதிகம் கொண்ட மண்டலமாக அடையாறு மண்டலம் திகழ்கிறது. அடையாறு தியாசோபிகல் சொசைட்டி, ஐ.ஐ.டி., ராஜ்பவன், சிறுவர்பூங்கா, அண்ணாபல்கலை ஆகியவற்றில் ஏராளமான மரங்கள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் குடியிருப்புகள், சாலையோரங்களிலும், அதிப்படியான மரங்கள் உள்ளன.கண்டனம் இந்த பகுதியில், பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தற்போது நடக்கிறது. அந்த இடங்களில், சாலையோரம் உள்ள பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன.
இதற்கு மாநகராட்சியும் அனுமதியளித்து வருகிறது. சமீபத்தில், வேளச்சேரி, ராணி தெருவில் வெட்டப்பட்ட பிரம்மாண்ட மரம் ஒன்று பெரும் சர்ச்சையாகி வருகிறது. மரம் வெட்டப்பட்டதற்கு, பல்வேறு நலச்சங்கத்தினர் மற்றும் சமூகநல விரும்பிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூகநல விரும்பிகள் கூறியதாவது.
வேளச்சேரி, ராணி தெருவில் இருந்த மரம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஒரு மீட்டர் விட்டம் கொண்ட இந்த பசுமையான மரம் அடியோடு வெட்டப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் எப்படி அனுமதி கொடுத்தனர் என்றே தெரியவில்லை. 'விசாரிக்கவும்' எங்கள் விசாரணையின்படி இந்த மரம் வெட்டுவதற்கு சில லட்சங்கள் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மரம் வெட்ட அனுமதி கொடுத்தது யார். அந்த மரத்தை வெட்ட பணம் கைமாறியதா என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரி மோகனை அலைபேசியில் அழைத்தபோது, அவர் பதிலளிக்கவில்லை.
-பசுமை நாயகன்