Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

பேஸ்புக்- டுவிட்டர் மூலம் அவதூறு ; கட்டுப்படுத்த சட்டம்: ஐ.பி., யோசனை

Pasumai Nayagan


        நாட்டில் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு ஒரு காரணமாக இருந்து வருவதும், அவதூறு பரப்புவதும், தேவையற்ற சர்ச்சையை கிளப்புவதுமாக நாட்டிற்கு ஒரு அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை , இந்திய சட்ட வரைமுறைக்குள் கொண்டு வரவேண்டும் என உளவுத்துறை பரிந்துரைத்துள்ளது. 
இது தொடர்பாக உளவுத்துறை ( ஐ.பி.) பிரதமருக்கு அனுப்பியுள்ள யோசனை குறிப்பில் பிறநாடுகளில் பின்பற்றப்படும் விதிகள் வகுத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. டில்லியில் நடந்த டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் பங்கேற்ற ஐ.பி,. டைரக்டர் ஆசீப் இப்ராகீம் தனது நிறைவு உரையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டால் தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க முடியும் என்றார். 


           இவர் மேலும் கூறுகையில், சமீப காலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வேகம் காரணமாக வீட்டில் இருந்த படியே பல சமூக விரோத செயல்கள் பரப்பப்படுகிறது. இது போன்ற சைபர் குற்றங்கள் தடுப்பது, சவால்களை எதிர்கொள்வது குறித்து அனைவரும் கலந்து பேசி ஆராய வேண்டிய நிலையில் உள்ளோம். சமீபத்திய கலவரம் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவியதை பார்த்து இந்திய பாதுகாப்பு துறையினர் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக இருந்தனர். 

    இதற்கு வெளிநாட்டு சட்டவிதிமுறைகள் தங்குதடையின்றி பெறும் வகையில் உள்ளது.இது தொடர்பாக இந்தியாவில் இன்னும் சட்டம் உரிய முறையில் வகுக்கப்படவில்லை. இத்தகைய சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்யும் வெளிநாட்டிவரையும் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவராக கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவில் சைபர் குற்றங்கள் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

          இந்த யோசனை குறித்து கம்ப்யூட்டர் எமர்ஜன்ஸி ரெஸ்பான்ஸ் டீம் இந்தியா டைரக்டர் ஜெனரல் குல்சன் ராய் கூறியதாவது: உளவுத்துறை அதிகாரி கூறுவது போல் , சட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்தால், சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவீட்டர் மூலம் கருத்துக்கள் சொல்லும் வெளிநாட்டவர்கள் முதல் அனைத்து வெப்சைட்டுகளும் இந்திய சட்டத்திற்கு பதில் சொல்பவராகவும், பணிய வேண்டியவர்களாகவும் இருப்பர். இவ்வாறு ராய் தெரிவித்தார்.

56 வது இடத்தில் இந்தியா :உலக அளவில் இணையதள பங்களிப்பு , சமூக பாதிப்பை ஏற்படுத்துதல் மற்றும் மனித உரிமை பாதுகாப்பில் நாடுகளின் நிலை குறித்து சர்வே எடுக்கும் வெப் இண்டெக்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில் 81 நாடுகள் அடிப்படையில் கணக்கெடுக்கப்பட்டதில் இந்தியா 56 வது இடத்தில் இருக்கிறது. இது போல் குறைந்த வளர்ச்சி, என்ற விவரத்தில் பாகிஸ்தான் 6 வது இடத்தில் இருக்கிறது. வியட்னாம் முதலிடத்தில் உள்ளது.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING