Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

உருகும் பனிப்பாறைகள் அழிவின் விளிம்பில் உலகம் !!!




   
Pasumai4U பசுமை நாயகன் thagaval
 
னிபாறைகள் பற்றிய செய்திகள் மற்றும் சினிமா படங்கள் நிறைய பார்த்து இருப்போம்.ஆனால் அதை அதோடு நாம் அதை மறந்து விடோவோம்.சுற்று
ச்சுழலை மாசு அடையாமல் இருபதில் நாம் அனைவருக்கும் முக்கிய பணக்கு இருக்கிறது . நம்மலுடைய வருங்கால சந்ததினர்கள் நாம் செய்யும் சின்ன கைமாறாக நினைக்க வேண்டும். சரி பனிபாறைகள் பற்றிய சில தகவல்களை நாம் இங்கே பார்ப்போம் .

      கிறீன்லாந்தின் பனிப்பாறைகள் துரித கதியில் உருகி வருவதாக சுற்றுச்சூழல்  ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.கடந்த ஆண்டுகளைப்போன்று இல்லாது இம்முறை அதிகளவு பனிப்பாறைகள் உருகி வருவதாகவும், இதனால் கடல் மட்டம் உயர்வடைந்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. செய்மதி மற்றும் பனிக்கட்டிகளைக் கொண்டு நடாத்தப்பட்ட சோதனையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

     கிறீன்லாந்தில் வருடாந்தம் சுமார் 273000 தொன் பனிக்கட்டி உருகி கடலுடன் கலப்பதாகவும், இது ஓர் ஆபத்தான நிலை எனவும் குறிப்பிடப்படுகிறது.பனிக்கட்டிகள் உருகுவதனால் நாளுக்கு நாள் கடல் மட்டம் உயர்வடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2000 மாம் ஆண்டுக்கு பின்னர் பனிக்கட்டி உருகும் அளவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் கடல் மட்டம் உயர்வடைவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    வருடாந்தம் மூன்று மில்லி மீற்றர் அளவில் உலகக் கடல் மட்டம் உயர்வடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கிறீன்லாந்தைச் சேர்ந்த பல பனிப்பாறைகள் துரித கதியில் உருகி வருகின்றமை அண்மைய செய்மதி ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கடல் ஆராய்ச்சிப்பிரிவு தலைமை ஆராய்ச்சியாளர் பீட்டர் வட்ஹாம்ஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வெளிப்பாடு இது. 

      அதிவேகமாக பனிப்பாறைகள் உருகி வருவதை சுட்டிக்காட்டி உள்ள அவர் உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவைதான் இதற்கான பிரதான காரணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பனிப்பாறைகள் உருகுவதால் மனிதர்களுக்கு மட்டுமின்றி அப்பிரதேசங்களில் மட்டுமே வாழும் பனிக்கரடி உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது. 

     இந்த நிலையில் இருந்து அவற்றைக் காப்பாற்ற துரித கதியில் உடனடி நடவடிக்கைகளை உலக நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

     இப்பொழுது நம்ம நாட்டில் உள்ள இமய மலையும் கரைய ஆரம்பித்துள்ளது. இமய மலையில் முன்பைப் போன்று அல்லாது வெகு வேகமாக கரைய ஆரம்பிக்கும் இமாலய பனிக்கட்டிகள் ஆசியாவில் உள்ள மிகப் பெரிய 10 நதிகளின் மூலம் வழிந்தோடுகின்றன. உலக உஷ்ணத்தால் 2030லிருந்து 2050க்குள் 35% பனிக்கட்டிகள் உருகிவிடும். இமாயலத்திலிருந்து உருகி ஆறாய்ப் பெருக்கெடுக்கும் நீரை நம்பியே 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா நதிகளுக்கு இமயத்தில் உள்ள சுமார் 16,000 பனிக்கட்டிகள்தான் காரணம். 

     இமய மலையில் அடிக்கடி ஏறி இறங்கி வரும் ஷெர்பா ஒருவர் 8000 அடிக்கு மேல் கூட பனிக்கட்டி உருகி நீராகி இருப்பதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். இது நாள் வரைக்கும் பனியையும் பனிக்கட்டிகளையும் பார்த்து வந்த அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இப்படி அளவுக்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகிக்கொண்டே இருந்தால் ஒரு காலத்தின் இமயத்திலிருந்து உருகியோடும் நீரின் அளவு கணிசமான அளவில் குறைந்துவிடும்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING