மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராடி, கடந்த ஒரு மாத காலம் தஞ்சை மற்றும் கும்பகோணம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து மக்களிடையே விழிப்புணர்வு மேற்கொண்டு வந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (30/12/13) இயற்கை எய்தினார்.
ஐயா அவர்கள் ஆலமரமாய் ஓங்கி வளர்ந்து விழுது விட்டு இன்று புத்தாண்டில் மீண்டும் விதைக்கப்படும் இயற்கை விதை! இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு நமக்கெல்லாம் பேரிழப்பு.தமிழ் உலகுக்கு மிகப்பெரும் இழப்பு.இயற்கையைப் பாதுகாப்பதற்காகவும் இயற்கை முறையில் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுதுடன் மட்டுமல்லாது செயலிலும் செய்து காட்டியவர்.அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!மனதில் உறுதியுடன் தமிழர்களாகிய நாம் நமது பயணத்தை தொடர்வோம். ஐயா அவர்கள் நமக்காகவே வாழ்ந்தவர்கள, நாம் அனைவரும் செய்ய வேண்டிய கடமை என்பதே நன்றி மறவாமல் ஐயா நம்மாழ்வார் அவர்கள் காட்டிய இயற்கை வழி செல்வோம்.
மிகுந்த வருத்தத்துடன்